ஆசிய கோப்பை 2023 பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் போட்டிகள் நடைபெறும்

ஜெய் ஷா தலைமையில் நடந்த ஏசிசி கூட்டத்தில், ஆசிய கோப்பை நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் எஞ்சிய 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பை போட்டி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும்.

சாம்பியன்ஷிப்பில் உள்ள ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சூப்பர் 4 நிலைக்குச் செல்லும். பின்னர் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *