தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் அணிக்கு பிரதமர் வாழ்த்து

ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தீபிகா பல்லிக்கல் & சந்து ஹரிந்தர், வெண்கலப் பதக்கம் வென்ற அனஹத் சிங் & அபய் சிங் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு :

“ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிக்கல் & சந்து ஹரிந்தர் தங்கப் பதக்கத்தையும், அனாஹத் சிங் & அபய் சிங்குக்கு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொடுத்ததில் இந்தியாவுக்கு பெருமையான தருணம். நமது  வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்கு வாழ்த்துக்கள்! அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கு  நல்வாழ்த்துக்கள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *