டாடா ஐபிஎல் 2024 தொடருக்கான வர்ணனையாளர்களின் கூட்டமைப்பில் சில நட்சத்திரங்களை சேர்த்துள்ளது ஜியோ சினிமா

~ முதல் முறையாக, வீரேந்திர சேவாக் இந்த சீசனில் ஜியோ சினிமாவில் அறிமுகமாகும் ஹரியான்வி என்ற வட்டார பேச்சுவழக்கில் வர்ணனை செய்கிறார் ~

~ அஜய் ஜடேஜா JioCinema -வில் TATA IPL 2024 க்கான குஜராத்தி நிபுணராக அறிமுகமாகிறார் ~

~பிரபல நடிகர் ரவி கிஷன் போஜ்புரி ஊட்டத்திற்கு தனது ஒப்பற்ற பாணியையும் குரலையும் வழங்கத் திரும்பியுள்ளார்~

~ கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா, அனில் கும்ப்ளே,இயான் மோர்கன், ராபின்  உத்தப்பா, ஸ்காட் ஸ்டைரிஸ், பார்த்திவ் படேல், ஆகாஷ் சோப்ரா, ஜாகீர் கான், கிரேம் ஸ்மித்,  பிரெட் லீ ஆகியோருடன் ஷேன் வாட்சன் மற்றும் மைக் ஹெசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்~

ஜியோசினிமா நேற்று 2024 டாடா இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான அவர்களின் நிபுணர் குழுவில்  சில நட்சத்திர வீரர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தியாவின் விருப்பமான  விளையாட்டு திருவிழாவான டாடா ஐபிஎல் 2024 தொடரை ஜியோ சினிமா பார்வையாளர்களுக்காக ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி,போஜ்புரி, பஞ்சாபி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம், ஹரியான்வி ஆகிய 12 மொழிகளில் இலவசமாக   வழங்குகிறது. இதில் ஹரியான்வி இம்முறை புதிய வர்ணணை மொழியாக  பார்வையாளர்களுக்காக கொண்டுவரப்படுகிறது.

இதுவரை பார்த்திராத அவதாரத்தில், உலகின் மிகவும் அபாயகரமான தொடக்க வீரர்களில்  ஒருவரான வீரேந்திர சேவாக் ஜியோ சினிமாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ஹரியான்வி மொழி வர்ணனை மற்றும் நிபுணர்குழுவுக்கு தலைமை தாங்குவார். அஜய் ஜடேஜா  குஜராத்தி மொழி நிபுணராக அறிமுகமாகிறார். முன்னாள் இந்திய கேப்டனும், எம்ஐ எமிரேட்ஸ் பேட்டிங் பயிற்சியாளருமான இவர், ஹிந்தி மற்றும் ஹேங்கவுட் ஊட்டங்களிலும் இடம்பெறுவார்.

ஐபிஎல் சாம்பியனான ஷேன் வாட்சன் மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இயக்குனரான மைக் ஹெசன், சேவாக்  மற்றும்  ஜடேஜா ஆகியோரின் சேர்க்கையானது உயர்மட்ட அணிகளின் டிரஸ்ஸிங் ரூமைப்  பகிர்ந்துகொண்ட முக்கிய உறுப்பினர்களிடமிருந்து ரசிகர்களை அணுகுவதற்கான ஜியோசினிமாவின் முக்கிய யோசனையை மேலும் ஆழப்படுத்தும்.

டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடிய பிறகு,  சேவாக் பஞ்சாப் அணியில் ஆலோசகராக பணியாற்றினார். இந்த முறை ஹரியான்வி மொழியில்  அவரது நகைச்சுவையான வர்ணணையை ரசிகர்கள் காண்பார்கள். 2012 ஐபிஎல் இறுதிப்  போட்டியின் ஆட்ட நாயகன் மன்விந்தர் பிஸ்லாவும் ஹரியான்வி ஊட்டத்தில் சேவாக்குடன் இணைவார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸுடன் பட்டங்களை வென்ற பிறகு, ஷேன்  வாட்சன் ஜியோ சினிமாவுடன் டாடா ஐபிஎலில் தனது புகழ்பெற்ற பயணத்தைத் தொடர்கிறார். வாட்சன், ராஜஸ்தான் ராயல்ஸுடன் தொடக்க சீசனில் தொடர் நாயகன் வீரர் விருதை வென்றார்.  அதே நேரத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 2018 இறுதிப் போட்டியில் சிஎஸ்கேவுக்காக 117* ரன்கள் எடுத்தது, ஐபிஎலில் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக அமைந்தது.

கிரிக்கெட்டில் கூர்மையான அறிவை கொண்ட மைக் ஹெசன்,ஜியோ சினிமாவுடன் ஒரு நிபுணராக  டாடா ஐபிஎல் உடன் தனது பயணத்தை நீட்டிக்கவுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணியின் பயிற்சியாளராகவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் கிரிக்கெட்  நடவடிக்கைகளின் இயக்குநராகவும் பணியாற்றிய பின்னர், கிறிஸ் கெய்ல் மற்றும் ஏபி  டிவில்லியர்ஸ் உள்ளிட்ட ஐபிஎலில் அவர் பயிற்சியளித்த சில மிகச் சிறந்த வீரர்களுடன் அமர்ந்து  நிபுணராக பணியாற்ற உள்ளார் மைக் ஹெசன்.

Viacom18 sports உள்ளடக்கத் தலைவர் சித்தார்த் சர்மா கூறும்போது,"டாடா ஐபிஎல் 2023  தொடரில் நாங்கள் வழங்கிய ஆழமான மற்றும் பரந்த விளக்கக்காட்சிகளுக்கு பார்வையாளர்கள்,  விளம்பரதாரர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது.  இதனால் TATA IPL 2024 தொடரில் எங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் முயற்சிகளை  இரட்டிப்பாக்குகிறோம்.

இந்த சீசனில், ஹீரோ கேம், வைரல் வீக்கெண்ட்ஸ் மற்றும் புகழ்பெற்ற வீரேந்திர சேவாக்கின்  ஹரியான்வி வர்ணனை அறிமுகம் போன்ற தனித்துவமான முன்மொழிவுகள் மூலம் ரசிகர்களுக்கு ஆழமான அனுபவத்தை வழங்க உள்ளோம். இதற்காக நாங்கள் தொடர்ந்து எங்களை  மேம்படுத்துகிறோம்” என்றார்.

டிஜிட்டல் வழங்கும் நெகிழ்வுத்தன்மை மற்றும் தேர்வுகளைப் பயன்படுத்தி, ஜியோசினிமா இந்த  ஆண்டு மொத்தம் 18 ஊட்டங்களை வழங்கும். இதில் கடந்த ஆண்டின் பிரபலமான இன்சைடர்ஸ்  மற்றும் ஹேங்கவுட் ஊட்டங்கள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோ கேம் ஊட்டம் மற்றும்  வைரல் வீக்எண்ட் எனப்படும் புதிய முன்மொழிவு ஆகியவை அடங்கும். 2024 சீசன் மூலம், ஜியோ  சினிமா ஒவ்வொரு வார இறுதியிலும், ஒவ்வொரு மொழியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட  பிரபலமான சமூக உள்ளடக்க படைப்பாளர்களை அழைத்து வரும். இவர்களுடன் இணைந்து  உரையாடல்கள், நிகழ்வுகள் மற்றும் நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவின்  முன்மொழிவை அவர்களின் ஒப்பற்ற பாணியில் நட்சத்திர நிபுணர்களுடன் இணைந்து  உருவாக்கும்.

ஹீரோ கேம், இந்த சீசனில் ஜியோ சினிமாவின் கேமரா கோணம் கூடுதலாக, ஒரு பார்வையாளரை   அனைத்து நேரடி செயல்களையும் பின்தொடர செய்வது மட்டுமல்லாமல்,  விளையாட்டின் மிகப்பெரிய ஹீரோவையும் பின்பற்ற அனுமதிக்கிறது. இது பார்வையாளர்களுக்கு  அவர்களின் ஹீரோக்கள் விளையாட்டை எவ்வாறு எடுத்துச் செல்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு  நெருக்கமான, தனிப்பட்ட மற்றும் தடையற்ற பார்வையை அனுமதிக்கிறது மற்றும்  போட்டிக்கு இடையில் அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்று உணரும் உணர்வைத்  தருகிறது. இது பார்வையாளர்கள் தேர்வு செய்யக்கூடிய அதிக கேமரா கோணங்களுடன் இருக்கும்.

இன்சைடர்ஸ் ஊட்டம், டாடா ஐபிஎலின் பொழுதுபோக்கை பார்வையாளர்களுக்கு மேலும்  அணுகக்கூடியதாக மாற்றும் ஜியோசினிமாவின் முக்கிய முன்மொழிவின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் அவர்கள் வெவ்வெறு அணிகள் குறித்து கேட்காத கதைகள்,  நிகழ்வுகள் மற்றும் டிரஸ்ஸிங் ரூம்களில் இருந்து உரையாடல்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.  ரசிகர்கள் நிபுணரின் பார்வையில் இருந்து வீரரின் மனதிற்குள் செல்ல முடியும் மற்றும் திரையில் வீரர்கள் விளையாடுவதை பார்க்கும் போது அவர்கள் விளையாட்டின் பின்னால் உள்ள சிந்தனை  செயல்முறையைப் புரிந்து கொள்ள முடியும்.

ஹேங்கவுட் ஊட்டம், புதிய உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மற்றும் அங்கத் சிங், விபுல்  கோயல், ஆதித்யா குல்ஷ்ரேஷ்தா, ஷஷி திமான் போன்ற பிரபலமான ஸ்டாண்ட்-அப் காமிக்ஸ்  மூலம் ரசிகர்களுக்கு லீக்கைப் பற்றி இலகுவான மற்றும் நகைச்சுவையான தோற்றத்தை  வழங்குவார்கள். இந்த ஊட்டம் மிகச்சிறந்த டாடா ஐபிஎல் தொடரின் பல்வேறு சுவாரசியமான  செயல்களை வழங்கும், இது முதல் முறையாக பார்வையிடுபவர்களையும், விளையாட்டு அல்லாத பார்வையாளர்களையும் ஈர்க்கும் மற்றும் லீக்கின் பார்வையாளர்களை அதிகரிக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோசினிமாவை (iOS & Android) பதிவிறக்கம் செய்வதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளை தொடர்ந்து பார்க்கலாம். சமீபத்திய புதுப்பிப்புகள்,  செய்திகள், ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் Facebook, Instagram, Twitter மற்றும்  YouTube-ல் Sports18 மற்றும் Facebook, Instagram, Twitter மற்றும் YouTube-ல் ஜியோசினிமாவைப் பின்தொடரலாம்.

வர்ணணை குழு பட்டியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *