தமிழக அமைச்சரவையில் இலாக்கா இல்லாத அமைச்சரானார் செந்தில் பாலாஜி. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை பிற அமைச்சர்களுக்கு மாற்றக் கோரி ஆளுநருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை அனுப்பியுள்ளார்.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத் துறையும், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறையும் கூடுதலாக ஒதுக்கப்படவுள்ளது.
தமிழக அமைச்சரவையில் துறைகள் இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது.