நாட்டில் கனிமவள உற்பத்தியை அதிகரிக்கவும், கனிம வளத் துறையில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்யவும் மத்திய அரசு பல்வேறு கொள்கை சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) (எம்எம்டிஆர்) சட்டம், 1957 பல முறை திருத்தப்பட்டுள்ளது . சில முக்கிய சீர்திருத்தங்களின் விவரம்:
நாட்டில் கனிமங்களின் உற்பத்தி குறைந்து வரும் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, எம்.எம்.டி.ஆர் சட்டம் பின்வரும் நோக்கங்களுடன் 2015 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது .
கனிம வளங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல்;
நடைமுறைகளை எளிமைப்படுத்துதல்;
நிர்வாகத்தில் ஏற்படும் காலதாமதத்தை ஒழித்தல், இதன் மூலம் விரைவான மற்றும் உகந்ததாக இருக்கும்.
நாட்டின் கனிம வளங்களை மேம்படுத்துதல்;
கனிமத்தின் மதிப்பில் மேம்பட்ட பங்கை அரசு பெறுதல்
கனிமவளத் துறையின் திறனை முழுமையாகப் பயன்படுத்தவும், நிலக்கரி உள்ளிட்ட சுரங்கத் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்கவும், மாநிலங்களுக்கு வருவாயை அதிகரிக்கவும், சுரங்கங்களின் உற்பத்தி மற்றும் காலவரையறை செயல்பாட்டை அதிகரிக்கவும், குத்தகைதாரர் மாற்றத்திற்குப் பிறகு சுரங்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியைப் பராமரிக்கவும், கனிம வளங்களின் ஆய்வு மற்றும் ஏலத்தின் வேகத்தை அதிகரிக்கவும், கனிம வளங்களின் வளர்ச்சியை மெதுவாக்கும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும் எம்.எம்.டி.ஆர் திருத்தச் சட்டம் 2021 ஆம் ஆண்டில் மேலும் திருத்தப்பட்டது.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
AD/ANU/IR/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1947012)