சாலையோர வியாபாரிகளுக்கு நிதியுதவி

கொவிட்-19 பெருந்தொற்றுநோயின் போது மோசமாக பாதிக்கப்பட்ட சாலையோர  வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்க பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக்கும் நோக்கத்துடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஜூன் 01, 2020 அன்று பிரதமரின் சாலையோர வியாபாரிகள் திட்டத்தை (பி.எம்.ஸ்வநிதி)  தொடங்கியது. இந்த திட்டம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது:

முந்தைய கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ₹20,000 மற்றும் ₹ 50,000 உயர்த்தப்பட்ட கடனுடன், 1 வருட   காலத்திற்கு ₹10,000 வரை பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை வழங்குதல்.

ஆண்டுக்கு 7% வட்டி மானியம் மூலம், வழக்கமான திருப்பிச் செலுத்துவதை ஊக்குவித்தல்;

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஆண்டுக்கு ₹1,200 வரை கேஷ் பேக் மூலம் வெகுமதி அளிக்கவும்.

இத்தகவலை மத்திய வீட்டுவசதித் துறை இணையமைச்சர் கவுஷல் கிஷோர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

(Release ID: 1945493)

ANU/SM/IR/KPG/KRS

(Release ID: 1945632) 

Read this release in: English Telugu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *