வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பிரதமர் மரியாதை

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். காந்தியடிகளின் தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவை காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுவிப்பதில் பெரும் பங்கு வகித்தது என்று திரு மோடி கூறினார். இந்த நிகழ்ச்சியில் வீடியோ செய்தி மூலம் திரு மோடி தனது எண்ணத்தை பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற மகத்தானவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். காந்தியடிகளின் தலைமையின் கீழ், காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதில் இந்த இயக்கம் பெரும் பங்கு வகித்தது. இன்று இந்தியா ஒருமித்த குரலில் எழுப்புகிறது:

ஊழலே இந்தியாவை விட்டு வெளியேறு.

வாரிசு அரசியலே இந்தியாவை விட்டு வெளியேறு.

திருப்திப்படுத்தும் மனப்பாங்கே இந்தியாவை விட்டு வெளியேறு.

AD/ANU/IR/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1946987)

இந்த வெளியீட்டை  படிக்க: Gujarati English Urdu Hindi Marathi Bengali Punjabi Telugu Kannada Malayalam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *