மத்திய அரசின் வேளாண் துறை, 2018-19 முதல் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா (ஆர்.கே.வி.ஒய்) திட்டத்தின் கீழ் புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் வேளாண் தொழில்முனைவோர் மேம்பாடடுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள பல்வேறு அறிவுசார் கூட்டு செயல்பாட்டு நிறுவனங்கள் மற்றும் வேளாண் தொழில் பாதுகாப்பகங்களில் ஸ்டார்ட்அப்களுக்கு (புத்தொழில் நிறுவனங்கள்) பயிற்சி அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள், சேவைகள், வணிகங்கள் போன்றவற்றை சந்தையில் அறிமுகப்படுத்தவும், செயல்பாடுகளை அதிகரிக்கவும் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி வழங்கப்படுகிறது.
வேளாண் ஸ்டார்ட் அப் மாநாடு, வேளாண் கண்காட்சிகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான நிகழ்ச்சிகளை மத்திய அரசு ஏற்பாடு செய்து, வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊகுவிக்கிறது.
மேலும், இளம் தொழில் முனைவோர் வேளாண் ஸ்டார்ட் அப்களை தொடங்குவதை ஊக்குவிப்பதற்காக 2023-24 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.500 கோடியில் “ஆக்ஸிலரேட்டர் ஃபண்ட்” எனப்படும் விரைவு நிதியம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்தகவலை மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.