உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் வருடாந்திர வளர்ச்சி 36.10% ஆகவும் மாதாந்திர வளர்ச்சி 15.24% ஆகவும் பதிவாகியுள்ளது

உள்நாட்டு விமானங்களின் போக்குவரத்து புள்ளி விவரங்கள் அடிப்படையில் இவற்றில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரங்களின் படி 2023, ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 636.07 லட்சமாகும். 2022 ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில்  பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 467.37 என்பதோடு ஒப்பிடுகையில் இது 36.10% ஆதிகமாகும்.

 

2022 மே மாதத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 114.67 லட்சமாக இருந்தநிலையில் 2023 மே மாதத்தில் 132.41 லட்சமாகப் பதிவாகியுள்ளது. இது மாத அடிப்படையில் 15.24%  அதிகமாகும். 2023 ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், 2023 மே மாதத்தில் 3.26 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது 2.52% அதிகமாகும்.

விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகள், பாதுகாப்பான வாடிக்கையாளரை மையப்படுத்திய விமானப் போக்குவரத்து சூழல் ஆகியவற்றால்  ஏற்படும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு இது சான்றாகும்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொழில் துறையின் விரிவாக்கம், புதிதாக பிராந்திய அளவில் விமான நிறுவனங்கள் உருவாதல் ஆகியவை நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, நாடு முழுவதும் மக்களை இணைக்கிறது என்றும், உடான் திட்டத்தின் மூலம் கடை கோடி மக்களுக்கான போக்குவரத்துத் தொடர்பு உறுதி செய்யப்படுகிறது என்றும் சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகு துறை அமைச்சர்  திரு ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *