மெய்நிகர் அனுபவத்தைத் தரும் AR/VR எக்ஸ்பீரியன்ஸ் மையத்தை MG மோட்டர் நிறுவனம் சென்னையில் துவங்கியுள்ளது

நிஜ உணர்வைத் தரும் இந்த டிஜிட்டல் ஸ்டூடியோவானது தொழில்நுட்பம் மற்றும்  ஆட்டோமோட்டிவ் துறைகளின் ஒருங்கிணைந்த அனுபவத்தை சிறந்த முறையில் வழங்கும்

99 வருட பாரம்பரிய பெருமையைக் கொண்ட பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் பிராண்டான MG மோட்டர் இந்தியா, MG ஸ்டூடியோஸ் (MG StudioZ) என்கிற தனித்துவமான நிஜ அனுபவத்தை வழங்கும் டிஜிட்டல் மையத்தை இன்று துவங்கியுள்ளது; விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) /  குமென்ட்டட் ரியாலிட்டி (AR) உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் இன்டராக்டிவ் ஆதாயங்களை பயன்படுத்தும் இந்த ஸ்டூடியோ, MG பிராண்டினை அனைத்து கார் ஆர்வலர்களிடமும் நெருக்கமாக அழைத்துச்செல்லும். MG StudioZ-இல் – டிஜிட்டல் முறையில் இயங்கும் ஒரு முகப்புத் திரை, வீடியோ வால் கான்ஃபிகரேட்டர் (wall configurator), மற்றும் VR/AR பகுதியுடன் கூடிய ஒரு பிரம்மாண்டமான விஷுவலைசர் (visualizer) போன்ற அம்சங்கள் உள்ளன. பல்வேறு ரகங்களில் MG மெர்ச்சன்டைஸ் தயாரிப்புகளும் இந்த MG StudioZ-இல் கிடைக்கும்; இவற்றின் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டின் மீதான அன்பை வெளிப்படுத்தவும், MG அனுபவத்தின் ஒரு பகுதியை அவர்களுடன் வீட்டிற்கு எடுத்துச் செல்லவும் முடியும்.

தொழில்நுட்ப ஆர்வலராகவும், வாகன பிரியர்களாகவும் இருக்கும் நவீன, நகர்ப்புற  வாடிக்கையாளரின் விருப்பங்கள் மற்றும் சிந்தனைகளை எதிரொலிக்கும் வகையில்  பன்முகத்தன்மையுடன் கூடிய ஒரு நெருக்கமான டிஜிட்டல் அனுபவ சூழலை வழங்குவதற்கான  ஒரு முன்முயற்சியே இந்த MG StudioZ. இதன் துவக்க விழாவில், அந்நிறுவனத்தால் சமீபத்தில்  அறிமுகப்படுத்தப்பட்ட – நகர்ப்புற பயணத்திற்கான ஸ்மார்ட் எலக்ட்ரிக் வாகனமான Comet EV,  மற்றும் இந்தியாவின் முதல் ப்யூர்-எலக்ட்ரிக் இன்டர்நெட் SUV வாகனமான ZS EV ஆகிய கார்கள் காட்சிப்படுத்தும்.

இந்த புதிய துவக்கம் பற்றி பேசிய MG மோட்டார் இந்தியா நிறுவனத்தின், மார்கெட்டிங் ஹெட்,  திரு.உதித் மல்ஹோத்ரா அவர்கள், “சென்னையில் உள்ள MG நிறுவனத்தின் இந்த முதல் டிஜிட்டல்  ஸ்டுடியோவானது – ‘டிஜிட்டல் புதுமைகளை கண்டறிவது மற்றும் வாடிக்கையாளர்களை  மையமாகக் கொண்ட அணுகுமுறையை கடைபிடிப்பது’ ஆகியவற்றில் எங்கள் பிராண்டு  கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு ஒரு உதாரணமாக விளங்கும். ஆட்டோமொபைல் மற்றும்  தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் இந்த StudioZ, நாங்கள் ஒரு ஆட்டோ-டெக் பிராண்டு  என்பதை சரியாக எதிரொலிக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் அனுபவங்களில் சிறந்தவற்றை ஒரே இடத்தில் வழங்குகிறது. வாகனங்களின் ரீடெயில் விற்பனை குறித்த எங்களது  எதிர்கால நோக்கத்தினை இந்த ஸ்டுடியோ சுட்டிக் காட்டுகிறது. பல்வேறு தளங்களில்  அணுகக்கூடிய ஒரு ஆம்னிசேனல் பிராண்டாக வளர்வதற்கு முக்கியத்துவம் தந்து, StudioZ போன்ற  டிஜிட்டல் இன்டர்ஃபேஸ்களைத் துவங்கி, அதன் மூலம் பிராண்டை வாடிக்கையாளருக்கு  நெருக்கமாக கொண்டு சேர்த்து அவர்களின் வாகனம் வாங்கும் அனுபவத்தை நாங்கள் மேம்படுத்தவுள்ளோம்", என்று கூறினார். மேலும், இளைஞர்களை மனதில் கொண்டு  உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டோர், இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட வசீகரமான  அம்சங்களையும் கொண்டுள்ளது. MG StudioZ-இன் இந்த துவக்கமானது, வாகனத் துறையில் ஒரு முன்னோடியாக விளங்கும் MG மோட்டார் நிறுவனம் அதன் பயணத்தில் எட்டிய மற்றொரு  இலக்காகப் பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் வாகனங்களின் ரீடெயில் விற்பனையை  மறுவரையறை செய்து, புதிய தரநிலைகளை நிர்ணயித்து வருவதால் – தனித்து விளங்கும்  சிறந்த தயாரிப்புகள் மற்றும் பயனாளர் அனுபவங்களை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *