குடியரசுத் தலைவர் அக்டோபர் 21 முதல் 24 வரை கேரளாவிற்கு பயணம்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2025 அக்டோபர் 21 முதல் 24 வரை கேரளாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

அக்டோபர் 21 ஆம் தேதி மாலையில் குடியரசுத் தலைவர் திருவனந்தபுரம் சென்றடைவார்.

அக்டோபர் 22 ஆம் தேதி, சபரிமலை கோயிலில் குடியரசுத் தலைவர் தரிசனம் செய்வார்.

அக்டோபர் 23 ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனில் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. கே.ஆர். நாராயணனின் மார்பளவு சிலையை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார். பின்னர், வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் ஸ்ரீ நாராயண குருவின் மகாசமாதி நூற்றாண்டு விழாவை அவர் தொடங்கி வைப்பார். பாளை, செயின்ட் தாமஸ் கல்லூரியின் வைரவிழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவிலும் அவர் கலந்து கொள்வார்.

அக்டோபர் 24 ஆம் தேதி, எர்ணாகுளம் புனித தெரசா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்வார்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *