யாரை ஏமாற்ற நான்கு நாட்கள் கழித்து கண்டனம்  –  ஸ்டாலினிக்கு எச்.ராஜா கடும் கண்டனம்

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டு நான்கு நாட்கள் கழித்து ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது இன்றைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, ” இந்த படுகொலை திருச்சியில் திருமாவளவன் தலைமையில், ஜவாஹிருல்லா முன்னிலையில் ஸ்டாலின் அவர்கள் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசியதன் செயல்வடிவம். இந்து தர்மத்தை…
கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை – ஸ்டாலின் கண்டனம்

சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட கும்பகோணம் ராமலிங்கம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவு மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார் கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்!
லயோலா கல்லூரியில் நடைபெற்றதைப் போன்ற ஓவியக் காட்சிகள் ஒருபோதும் கலையை வளர்க்காது – மருத்துவர் ச. இராமதாசு

லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சி குறித்து பதிவு ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில ஓவியங்கள் இடம்பெற்றிருந்தது கண்டிக்கத்தக்கது. கலை வடிவங்கள் அனைவரையும் மகிழ வைக்கவே தவிர, யாரையும் காயப்படுத்துவதற்கு அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்! சென்னை லயோலா கல்லூரியில்…
கூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது – மருத்துவர் ச. இராமதாசு

மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் கூட்டணிகுறித்து ஊடகங்கள் கற்பனை குதிரையில் சவாரி செய்து உண்மையற்ற செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். கூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. முடிவு எடுத்தவுடன் அதை வெளிப்படையாக அறிவிப்பேன்! என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு, தனது ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்
அஜித் தெளிவான முடிவை அறிவித்ததை வரவேற்கிறேன் – தமிழிசை

“சில நடிகர்கள் போல் அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று சொல்லாமல் நடிகர் அஜித் தெளிவான முடிவை அறிவித்ததை வரவேற்கிறேன்.” என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்

பாரதமாதா, பாரதப் பிரதமர் மற்றும் இந்து மதத்தை இழிவு படுத்தும் லயோலா கண்காட்சியை திறந்து வைத்த சகாயம் IAS மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவு மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இனிமையான பயணத்திற்கு இனி ‘Ryde’ தான் பெஸ்ட் ; சினேகா புகழாராம்

நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிகாக கால் டாக்ஸி நிறுவனங்கள் துவங்கப்பட்டு தங்கள் சேவையை பயணிகளுக்கு அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாகி உருவாகியுள்ள நிறுவனம்தான் Ryde’. இதுவும் மற்ற கால் டாக்ஸி நிறுவனங்கள் போலத்தானே என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் மற்ற நிறுவனங்களைப் போல அல்லாமல், முதல் தலைமுறை தொழிலதிபர்கள்…
அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.01.2019) கேரள மாநிலம் கொல்லம் சென்றார். தேசிய நெடுஞ்சாலை 66-ல் 13 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள, இருவழி கொல்லம் புறவழிச்சாலையை நாட்டிற்கு அவர் அர்ப்பணித்தார். கேரள மாநில ஆளுநர் நீதிபதி பி சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கே ஜே அல்போன்ஸ் உள்ளிட்டோர்…
அறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.!

எலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது. இப்போது நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக 45 அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.2,900) என்ற விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த டெஸ்லா பவர் பேங்க் ஆனது யூஎஸ்பி, மைக்ரோ-யூஎஸ்பி, ஆப்பிள் லைட்னிங் மற்றும் அகற்றக்கூடிய…
வருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்

வருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார் சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையையடுத்து, அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த பெங்களூரு சிறையில் தனி அறை தயார் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு: சசிகலா உறவினர்கள் வீடுகளில் 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் 187 இடங்களில் நடத்திய சோதனையில்…