வேலை வாய்ப்பு திருவிழா மூலம், அரசுத் துறைகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 70,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை ஜூலை 22 அன்று பிரதமர் வழங்குகிறார்

மத்திய அரசுப் பணிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு 22.07.2023 அன்று காலை 10.30 மணி  அளவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின்போது பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் உரையாற்றவுள்ளார். நாடு முழுவதும் 44 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா எனப்படும் ரோஜ்கர் மேளா நடைபெற உள்ளது. இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் புதிய பணியாளர்கள், வருவாய்த் துறை, நிதி சேவைகள் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பணியில் சேரவுள்ளனர். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இந்த ரோஸ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் அமைந்துள்ளன.  ரோஸ்கர் மேளாக்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு ஊக்க சக்தியாக செயல்படும். இளைஞர்களுக்கு அதிகாரமளித்து தேச வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை இது வழங்கும். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி இணையதளத்தில் உள்ள இணையதளப் பயிற்சித் தொகுப்பான கர்மயோகி பிரரம்ப் மூலம் பயிற்சி பெறுவார்கள். அதில் 580 க்கும் மேற்பட்ட மின் கற்றல் தொகுப்புகள் எங்கிருந்தும் எந்த சாதனத்தின் மூலமும் கற்றல் என்ற வடிவத்தில் கிடைக்கின்றன.

கால்நடைத் துறைக்கான முதல் “கடன் உத்தரவாதத் திட்டம்” தொடங்கப்பட்டது

மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (ஏ.எச்.ஐ.டி.எஃப்) கீழ் கடன் உத்தரவாதத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 750 கோடி ரூபாய்…

அயோத்தி விமான நிலையத்தின் மேம்பாடு செப்டம்பர் 2023க்குள் முடிக்கப்படும்

அயோத்தி விமான நிலையத்தின் மேம்பாடு செப்டம்பர் 2023க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விமான நிலையம் A-320/B-737 ரக விமானங்களை இயக்குவதற்கு ஏற்றதாக இருக்கும் மற்றும் ரூ.350 கோடி செலவில் (தோராயமாக)…

ஐஎன்எஸ் ஷான்குஷ் நீர்மூழ்கி கப்பலின் மறுசீரமைப்பு சான்றிதழுக்காக மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரூ.2,275 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 2023, ஜூன் 30-ந் தேதி ஐஎன்எஸ் ஷான்குஷ் நீர்மூழ்கிக் கப்பலின் மறுசீரமைப்பு சான்றிதழுக்காக மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் மும்பையில் ஒப்பந்தம் மேற்கொண்டது.…

பாரத பிரதமரின் 102ஆவது மனதின் குரல் முழு பேச்சின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே வணக்கம்.   மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் வரவேற்கிறேன்.   பொதுவாக மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தான் இடம் பெறும், ஆனால், இந்த…

பெர்லினில் தொடங்கும் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

பெர்லினில் தொடங்கும் சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியக் குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “சிறப்பு…

வளர்ந்த இந்தியா என்ற எண்ணம் இப்போது வெறும் கனவு அல்ல, அது பிரதமரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நிஜமாகி வருகிறது – ராஜ்நாத் சிங்

அரசு ஊழியர்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதன் மூலம் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார் நியாயம் செய்யும் கலாச்சாரம் இப்போது…

ரத்ததான அமிர்தப் பெருவிழாவில் ரத்ததானம் செய்தவர்களுக்கு பிரதமர் பாராட்டு

  உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம்களுக்கும், ரத்த தானம் செய்தவர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ‘ரத்தம் கொடுங்கள்; பிளாஸ்மா…

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தில் நடைபெறும் யோகப்பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதுகுறித்து ஐநா சபையின் தலைவர் திரு சாபா கொரோஷி வெளியிட்டுள்ள…