உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம்களுக்கும், ரத்த தானம் செய்தவர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘ரத்தம் கொடுங்கள்; பிளாஸ்மா கொடுங்கள்; வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள்; அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்ற செய்தியை வலியுறுத்தி உலக ரத்ததான தினம் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. ரத்ததான அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, ரத்ததானம் செய்பவர்களை கௌரவிக்கும் வகையில் ஏராளமான ரத்ததான முகாம்கள் நடைபெற்றன”, என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதற்கு பதில் அளித்து பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியதாவது:
“ரத்ததானம் செய்பவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். அவர்களது அன்பான செயல், எண்ணிலடங்காத உயிர்களைப் பாதுகாக்கிறது. சேவை மற்றும் இரக்கம் என்ற இந்தியாவின் கலாச்சார இயல்பையும் இது வலுப்படுத்துகிறது.”