பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சமையல் குறிப்பு சவால்

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் தனக்கு பிடித்தமான சமையல் குறிப்பு ஒன்றினை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

முன்னணி நட்சத்திர நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இந்தத் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சமையல் கலை நிபுணர் வேடத்தில் நடித்திருக்கிறார். இதனை ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் புதுமையான முயற்சியாக #சமையல் குறிப்பு சவால் ஒன்றை அப்படத்தின் நாயகியான அனுஷ்கா முன்னெடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனக்கு பிடித்த உணவினையும், அதற்கான செய்முறை குறிப்பையும் பகிர்ந்து கொண்டு, இந்த சவாலை அனைவரும் பின் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இந்த தனித்துவமான முயற்சியை உணவின் மீதும்… விருந்தோம்பல் மீதும்… பேரன்பு கொண்ட பிரபாஸுடன் இந்த சவாலை தொடங்க விரும்புகிறேன் எனவும் பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து நட்சத்திர நடிகரான பிரபாஸ் தனக்கு விருப்பமான ரொய்யாலா புலாவ் ( இறால் புலாவ்) எனும் உணவை தயாரிக்கும் செய்முறையை விரிவாகவும், ரசனையுடனும் விவரித்து அதனை சமூக ஊடகங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டார். அத்துடன் இந்த #சமையல் குறிப்பு சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மற்றொரு முன்னணி நட்சத்திர நடிகரான ராம் சரணை டேக் செய்து, அவரிடமும் கேட்டுக் கொண்டார். மேலும் தனது ரசிகர்களிடத்திலும் தங்களுக்குப் பிடித்த உணவையும், அதன் செய்முறையும் புகைப்படத்துடன் அல்லது காணொளியாக சமூக வலைதளங்களில் பதிவிடுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிரபாஸ் மற்றும் அனுஷ்கா முன்னெடுத்திருக்கும் #சமையல் குறிப்பு சவால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் நடிகர் பிரபாஸ் செப்டம்பர் 7ஆம் தேதியன்று அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே பிரபாஸ் தனக்கு பிடித்த உணவையும் அதற்கான செய்முறையையும் முதன்முறையாக விவரித்திருந்தது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்பதும், தெலுங்கு திரையுலகில் சுவையான உணவுகள் மீதும், பாரம்பரியம் -கலாச்சாரம்- பண்பாடுடன் கூடிய பிரபாஸின் விருந்தோம்பல் பண்பும் மீதும் பிரபாஸ் கொண்டிருக்கும் பெரு விருப்பம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் , அவர் தனக்கு பிடித்தமான திரையுலக நண்பர்களுக்காக அவர்களின் வேண்டுகோளை தயக்கமில்லாமல் ஏற்று செயல்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *