தென்னாப்பிரிக்க அதிபருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு

தென்னாப்பிரிக்கக் அதிபர் திரு மதெமெலா சிரில் ராமபோசாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி  (03-08-2023) தொலைபேசியில் உரையாடினார்.

இந்த 2023 ஆம் ஆண்டில் இருதரப்பு ராஜதந்திர, தூதரக உறவுகள் தொடங்கியதன் முப்பதாவது ஆண்டு நிறைவடையும் நிலையில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

2023 ஆகஸ்ட் 22 முதல் 24-ம் தேதி வரை தென்னாப்பிரிக்கா நடத்தும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு வந்து கலந்து கொள்ளுமாறு தென்னாப்பிரிக்க அதிபர் திரு ராமபோசா பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பிரதமருக்கு தென்னாப்பிரிக்க அதிபர் விளக்கினார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர், மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோகன்னஸ்பர்க் நகருக்குப் பயணிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

பரஸ்பர நலன் கொண்ட பல்வேறு விவகாரங்கள், பிராநதிய மற்றும் உலகளாவிய சிக்கல்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவின் முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்த தென்னாப்பிரிக்க அதிபர் திரு ராமபோசா, ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வருகை தர ஆவலாக இருப்பதாகக் கூறினார்.

இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.

Release ID=1945591
(Release ID: 1945635)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *