முக்கிய சிறப்பம்சங்கள்
(செப்டம்பர்’24 மற்றும் செப்டம்பர்’25-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)
நிகர இலாபம் செப்டம்பர்’24-ல் ₹2707 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’25-ல் ₹3018 கோடியாக, முந்தைய ஆண்டைவிட
11.49% உயர்ந்திருக்கிறது
செயல்பாட்டு இலாபம் செப்டம்பர்’24-ல் ₹4728 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’25-ல் ₹4837 கோடியாக, முந்தைய
ஆண்டைவிட 2.31% அதிகரித்திருக்கிறது
நிகர வட்டி வருவாய் செப்டம்பர்’24-ல் ₹6194 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’25-ல் ₹6551 கோடியாக, முந்தைய
ஆண்டைவிட 5.76% அதிகரித்திருக்கிறது
சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) செப்டம்பர்’25-ல் 1.32% என்பதாகவும் பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை
(RoE) செப்டம்பர்’25-ல் 19.58% என்பதாகவும் இருக்கிறது
கடன்கள் மீதான ஈட்டம் (YoA) செப்டம்பர்’25-ல் 8.40% என்பதாக பதிவாகியிருக்கிறது
வைப்புத் தொகைக்கான செலவு, செப்டம்பர்’24-ல் இருந்த 5.13% என்பதிலிருந்து 12 bps உயர்வுடன் 5.01% ஆக
செப்டம்பர்’25-ல் பதிவாகியிருக்கிறது
மொத்த கடன்கள், செப்டம்பர்’24-ல் பதிவான ₹550644 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’25-ல் 12.65% வளர்ச்சி பெற்று
₹620324 கோடியாக அதிகரித்திருக்கிறது
RAM துறைக்கு (ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME) வழங்கப்பட்ட கடன்கள் செப்டம்பர்’24-ல் ₹325050 கோடி என்ற
அளவிலிருந்து செப்டம்பர்’25-ல் ₹375660 கோடியாக உயர்ந்து 15.57% வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது
மொத்த உள்நாட்டு கடன்களுக்கு RAM-ன் பங்களிப்பு 65.50% ஆக இருக்கிறது. ரீடெய்ல், விவசாயம், MSME (RAM) ஆகிய
பிரிவுகளுக்கான கடன்கள் முந்தைய ஆண்டைவிட முறையே 18.58%, 13.98% மற்றும் 14.10% என அதிகரித்திருக்கின்றன.
முந்தைய ஆண்டைவிட வீட்டுக்கடன் (அடமானம் உட்பட) 12.68% என செப்டம்பர்’25-ல் அதிகரித்திருக்கின்றன
ஒழுங்குமுறை தேவைப்பாடான 40%-க்கு எதிராக முன்னுரிமை துறைக்கான கடன்கள் ANBC-யின் ஒரு சதவீதமாக 42.51%-ல்
₹206149 கோடி என பதிவாகியிருக்கிறது
மொத்த டெபாசிட்கள் முந்தைய ஆண்டைவிட 12.09% வளர்ச்சி கண்டு செப்டம்பர்’25-ல் ₹776946 கோடி என்ற அளவை
எட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு மற்றும் CASA டெபாசிட்கள்
முறையே 11.40%, 6.59% மற்றும் 7.23% என அதிகரித்திருக்கிறது
30 செப்டம்பர்’25 அன்று உள்நாட்டு CASA விகிதம் 38.87% என பதிவாகியிருக்கிறது
30 செப்டம்பர்’25 அன்று CD விகிதம் 79.84% என பதிவாகியிருக்கிறது
GNPA (மொத்த வாராக்கடன்கள்) செப்டம்பர்’24-ல் இருந்த 3.48% லிருந்து முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 88 bps
குறைந்து 2.60% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) செப்டம்பர்’24-ல் இருந்த 0.27% லிருந்து
செப்டம்பர்’25-ல் 11 bps குறைந்து 0.16% ஆக பதிவாகியிருக்கிறது
வாரா ஐயக்கடன்களுக்கான (PCR) நிதி ஒதுக்கீட்டு விகிதம் (TWO – தொழில்நுட்ப கடன் தள்ளுபடி உட்பட, PCR),
செப்டம்பர்’24-ல் இருந்த 97.60% லிருந்து செப்டம்பர்’25-ல் 68 bps அதிகரித்து 98.28% ஆக பதிவாகியிருக்கிறது
நழுவல் விகிதம், செப்டம்பர்’24-ல் 1.06% ஆக இருந்ததுடன் ஒப்பிடுகையில் செப்டம்பர்’25-ல் 0.79% ஆக
கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது
மூலதன போதுமான நிலை விகிதம் செப்டம்பர்’25-ல் 17.31% ஆக இருக்கிறது. CET-I, 14.80% ஆகவும் & அடுக்கு I மூலதனம்
15.27% என்ற அளவிலும் பதிவாகியிருக்கின்றன
ஒரு பங்கிற்கான ஈட்டம் (EPS), செப்டம்பர்’24-ல் இருந்த ₹80.37 என்பதிலிருந்து செப்டம்பர்’25-ல் ₹89.63 ஆக
உயர்ந்திருக்கிறது
முக்கிய சிறப்பம்சங்கள்
(செப்டம்பர்’25 மற்றும் ஜுன்’25-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)
நிகர இலாபம் ஜுன்’25-ல் பதிவான ₹2973 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’25-ல் ₹3018 கோடியாக, முந்தைய
காலாண்டைவிட 1.51% உயர்ந்திருக்கிறது
கட்டணம் சார்ந்த வருவாய், ஜுன்’25-ல் பதிவான ₹790 கோடியைவிட 5% அதிகரித்து செப்டம்பர்’25-ல் ₹830 கோடி என
உயர்ந்திருக்கிறது
முதலீடுகள் மீதான ஈட்டம் (YoI), ஜுன்’25-ல் இருந்த 6.96% என்பதிலிருந்து 7 bps மேம்பட்டு செப்டம்பர்’25-ல் 7.03%
பதிவாகியிருக்கிறது
நிகர வட்டி வருவாய் (NIM) உள்நாட்டளவில் செப்டம்பர்’25-ல் 3.34% ஆக இருக்கிறது.
GNPA (மொத்த வாராக்கடன்கள்) ஜுன்’25-ல் இருந்த 3.01% லிருந்து 41 bps குறைந்து 2.60% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA
(நிகர வாராக்கடன்கள்) ஜுன்’25-ல் இருந்த 0.18% லிருந்து செப்டம்பர்’25-ல் 2 bps குறைந்து 0.16% ஆக பதிவாகியிருக்கிறது
முக்கிய சிறப்பம்சங்கள்
(செப்டம்பர்’24 மற்றும் செப்டம்பர்’25-ல் முடிவடைந்த அரையாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)
நிகர இலாபம் H1FY25-ல் (நிதியாண்டு 25-ன் முதல் அரையாண்டில்) பதிவான ₹5110 கோடியிலிருந்து H1FY26-ல் ₹5991
கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.24% உயர்ந்திருக்கிறது
செயல்பாட்டு இலாபம் H1FY25-ல் ₹9230 கோடி என்பதிலிருந்து H1FY26-ல் ₹9607 கோடியாக, முந்தைய ஆண்டுடன்
ஒப்பிடுகையில் H1FY26-ல் 4.08% உயர்ந்திருக்கிறது
நிகர வட்டி வருவாய் H1FY25-ல் ₹12372 கோடி என்பதிலிருந்து H1FY26-ல் ₹12910 கோடியாக, முந்தைய ஆண்டுடன்
ஒப்பிடுகையில் H1FY26-ல் 4.35% உயர்ந்திருக்கிறது
உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), H1FY26-ல் ₹3.35% ஆக இருக்கிறது.
சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) H1FY25-ன் 1.26% லிருந்து 7 bps உயர்ந்து 1.33% என முன்னேற்றம்
கண்டிருக்கிறது
கடனுக்கான செலவு, H1FY25-ன் 0.68% லிருந்து 41 bps முன்னேற்றம் கண்டு 0.27% ஆக உயர்ந்திருக்கிறது
பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) 19.93% ஆக பதிவாகியிருக்கிறது
வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள்:
இவ்வங்கி, (3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட) உள்நாட்டில் 5955 கிளைகளைக் கொண்டிருக்கிறது;
இக்கிளைகளுள் 2001 கிராமப்புறங்களிலும், 1587 சிறு நகரங்களிலும், 1189 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1178
பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் 1 IBU-யும் (கிஃப்ட் சிட்டி கிளை)
இருக்கிறது.
இவ்வங்கி, 5565 ஏடிஎம்கள் மற்றும் பிஎன்ஏ-களையும் மற்றும் 15598 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டு
செயலாற்றுகிறது.
டிஜிட்டல் வங்கிச்சேவை:
H1FY26-ல் டிஜிட்டல் சேனல்கள் வழியாக ₹1,23,585 கோடி பிசினஸ் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவரை மொத்தத்தில்
132 டிஜிட்டல் பயணங்கள், பயன்பாடுகள் மற்றும் செயல்முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
மொபைல் பேங்கிங் சேவையின் பயனாளிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 17% உயர்ந்து 2.11 கோடி என்ற
எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
UPI பயனாளிகள் மற்றும் நெட் பேங்கிங் பயனாளிகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டும் முந்தைய ஆண்டைவிட (YoY) 24% &
6% அதிகரித்து முறையே 2.41 கோடி மற்றும் 1.17 கோடி என பதிவாகியிருக்கிறது. டெபிட் அட்டை மற்றும் கிரெடிட் அட்டை
ஆகிய இரண்டு வகை பயனாளிகளின் எண்ணிக்கையும் 5% அதிகரித்திருக்கிறது.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்:
'ராஜ்பாஷா கீர்த்தி விருது 2025'-இன் கீழ் அலுவல் மொழியை ஊக்குவிப்பதில் மேற்கொண்ட சிறந்த முயற்சிகளுக்காக,
இந்தியன் வங்கிக்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது.
கிளவுட் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் வங்கியின் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, விஎம்வேர் இந்தியா
(VMware India) வழங்கிய 'கிளவுட் லீடர் – இந்தியா 2025' விருதை வங்கி பெற்றிருக்கிறது.
டிஎஸ்ஐஜே-யின் (DSIJ) 2025 சிஎஃப்ஓ (CFO) விருதுகள் விழாவில், இந்தியன் வங்கியின் தலைமை நிதி அதிகாரி, 'லார்ஜ் கேப்'
பிரிவில் 'சிறந்த சிஎஃப்ஓ'-வாக கௌரவிக்கப்பட்டார்.
எமது சிறப்பு கூர்நோக்கம்:
மாறிவரும் சூழலுக்கேற்ப நெகிழ்வுத்திறனுடன் சிறப்பாக இயங்குதல், வெளிப்படைத்தன்மை மூலம் நம்பிக்கையைக் கட்டமைத்தல் மற்றும்
வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை வழங்குதல் ஆகியவற்றில் எமது சிறப்பு கவனம் தொடர்ந்து வலுவாக
இருக்கிறது. புத்தாக்க முயற்சிகளில் முதலீடு செய்வதன் மூலமும், நிதிச்சேவைகளை குறைவாகப் பெறும் பிரிவினருக்கும் வங்கிச்
சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலமும், எங்களின் நீண்ட கால வெற்றிக்கான அடித்தளத்தை நாங்கள் மேலும் வலுப்படுத்தி வருகிறோம்.