மகளிர் சக்திக்கு பிரதமர் வணக்கம்

பாபா விஸ்வநாதரின் நகரமான காசியில் எங்கு சென்றாலும் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் காட்டிய உற்சாகத்தைக் கண்டு நெகிழ்ந்து போனதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். நாரி சக்தி வந்தன் சட்டம் அவர்களுக்குள் நிரப்பியுள்ள ஆற்றல், அமிர்த கால தீர்மானங்களை மேலும் வலுப்படுத்தப் போகிறது என்று திரு மோடி மேலும் கூறினார்.

எக்ஸ் சமூக ஊடக பதிவு ஒன்றில் பிரதமர் கூறியதாவது:

“பெண்களின் சக்தியை வணங்குகிறேன்!

இன்று நான் பாபா விஸ்வநாதரின் நகரத்திற்குச் சென்ற இடங்களிலெல்லாம் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் உற்சாகம் நிரம்பி வழிந்தது. நாரி சக்தி வந்தன் சட்டம் நம் குடும்பங்களில் விதைத்திருக்கும் ஆற்றல், அமிர்த காலத்தின் தீர்மானங்களை மேலும் வலுப்படுத்தப் போகிறது.”

(Release ID: 1960030)

AP/BR/KRS

(வெளியீட்டு அடையாள எண்: 1960059)

இந்த வெளியீட்டை படிக்க: English Urdu Hindi Assamese Manipuri Punjabi Malayalam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *