ஒவ்வொரு மருத்துவரும் பொதுவான பெயர்களைக் கொண்ட மருந்துகளை சட்டப்பூர்வமாகவும், பெரிய எழுத்துக்களிலும் பரிந்துரைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒழுங்குமுறை விதிகள் கூறுகின்றன. மேலும், இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் 22.11.2012, 18.01.2013 மற்றும் 21.04.2017 ஆகிய தேதிகளில் சுற்றறிக்கைகளை வெளியிட்டது.
ஜெனரிக் மருந்துகளின் பரிந்துரையை உறுதி செய்யவும், பொது சுகாதார மையங்களில் வழக்கமான பரிந்துரை தணிக்கைகளை நடத்தவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும் மலிவு விலையில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்காக, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 9600 க்கும் மேற்பட்ட பிரதமரின் ஜன் அவுஷாதி எனப்படும் பிரதமரின் மக்கள் மருந்தக மையங்கள் (பி.எம்.பி.ஜே.கே) அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் மருந்தகங்கள் தொடர்பாக சுகம் என்ற மொபைல் செயலியும் உள்ளது. மேலும் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை மேலும் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7 ஆம் தேதி ஜன் அவுஷாதி தினம் கொண்டாடப்படுகிறது.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், பொது சுகாதார மையங்களில் அத்தியாவசிய ஜெனரிக் மருந்துகளை இலவசமாக வழங்க ஆதரவு வழங்கப்படுகிறது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ANU/PLM/KPG
(Release ID: 1943753)