காங்க்ருவன்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் அதன் பிரத்தியேகமான புதிய பணி ஓய்வு சிறப்பு மையத்துடன் கோயம்புத்தூரிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது

ரிட்டையர்மென்ட் துறைக்கு தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்சிங் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான காங்க்ருவன்ட் சொல்யூஷன்ஸ் (Congruent Solutions) – தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அதன் புதிய பணிஓய்வு திட்ட நிர்வாகம் மற்றும் முக்கிய (CORE) தயாரிப்பு மேம்பாட்டு மையத்தை தொடங்குவதாக இன்று அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கமானது காங்க்ருவன்ட் நிறுவனத்தின் விரைவான வளர்ச்சி மற்றும் சிறந்த திறமைசாலிகளை ஈர்ப்பதில் அந்நிறுவனத்திற்கு உள்ள உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகிறது; வட அமெரிக்க ரிட்டையர்மென்ட் சேவைகளில் இதன் வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது, அவற்றை பூர்த்தி செய்ய, வணிக ரீதியாக செயல்பாடுகளைத் தொடரவும், விரிவாக்கம் செய்வதும் அவசியமாகிறது.

இந்த புதிய கோயம்புத்தூர் மையமானது 70 ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கும், மேலும் எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மையமானது – காங்க்ருவன்ட் நிறுவனத்தின் அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட திட்ட நிர்வாக சேவைகள், இணக்கம் (கம்ப்லையன்ஸ்) ஆகியவற்றிற்கு ஆதரவளிப்பதிலும், ரிட்டையர்மென்ட் பதிவு காப்பாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினர் நிர்வாகத்தின் (TPAs) செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும். மேலும், SaaS தீர்வுகளின் CORE தொகுப்பிற்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் சப்போர்ட் குழுவையும் இந்த புதிய மையம் விரிவுபடுத்தும்.

“ரிட்டையர்மென்ட் திட்ட வழங்குநர்கள் பலர் அதிகரித்து வரும் சிக்கல்களையும், செலவீன அழுத்தங்களையும், கடுமையான இணக்கத் தேவைகளையும் எதிர்கொள்ளும் சூழல் உள்ளதால், காங்க்ருவன்ட் நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது,” என்று கூறிய காங்க்ருவன்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின், இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் திரு. பலராமன் ஜெயராமன் அவர்கள் மேலும் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வணிகச் சேவைகளை உறுதி செய்யும் அதே நேரத்தில், கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல திறமைசாலிகளை பணிக்கு ஈர்ப்பதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்கும் எங்களது ஆற்றலுக்கு இந்த கோயம்புத்தூர் மையம் மேலும் வலு சேர்க்கிறது.”

வேகமாக வளர்ந்து வரும் காங்க்ருவன்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில், 55-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் நிறுவனங்கள் உள்ளன; சுமார் 47,000 ரிட்டையர்மென்ட் திட்டங்கள் மற்றும் அமெரிக்கா முழுவதும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பங்கேற்பாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு ரிட்டையர்மென்ட் தொழிற்துறையில் உள்ள ஆழமான நிபுணத்துவம், அதன் மேம்பட்ட தொழில்நுட்ப தளங்கள் மற்றும் விரிவாக்கம் செய்யத்தக்க டெலிவரி மாடல் ஆகியவற்றின் சரியான ஒருங்கிணைப்பின் காரணமாக – பதிவுக் காப்பாளர்கள், TPA நிறுவனங்கள், ஆலோசகர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு காங்க்ருவன்ட் சொல்யூஷன்ஸ் நம்பகமான பங்காளராக திகழ்கிறது.

“கோயம்புத்தூரில் நிறைவாக திறமைசாலிகள் இருப்பதாலும், தொழில்முனைவு குறித்த அறிவு மற்றும் தொழில்நுட்ப மையமாக வளர்ந்து வரும் நகரம் என்கிற நற்பெயருடன், காங்க்ருவன்ட் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு சிறந்த இடமாக அமைந்துள்ளது” என்று கூறிய அதன் இணை நிறுவனரும், தலைமை ஸ்ட்ராட்டஜி அலுவலருமான திரு. சந்திரசேகர் வைத்தியநாதன் அவர்கள், “இந்த மையம் ரிட்டையர்மென்ட் சேவை வழங்குநர்களுக்கு செயல்பாடுகளை நவீனப்படுத்துதல், பங்கேற்பாளர் விளைவுகளை மேம்படுத்துதல், மற்றும் திறம்பட விரிவாக்கம் செய்தல் ஆகியவற்றில் உதவ வேண்டும் என்கிற எங்கள் தொலைநோக்கு சிந்தனைக்கு மேலும் வலுவூட்டுகிறது,” என்று தெரிவித்தார்.

இந்த புதிய மையமானது காங்க்ருவன்ட் நிறுவனத்தின் பிஸ்னஸ் கன்டின்யூவிட்டி பிளானின் (BCP) ஒரு முக்கியமான அங்கமாக இருந்து – உறுதியான மற்றும் பகிரப்பட்ட செயல்பாடுகள் மூலம் அதன் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு தடையற்ற ஆதரவை வழங்குவதை உறுதி செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *