2024 ஜுன் 30 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிசார் முடிவுகள்

வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 11% உயர்ந்து ₹12.20 லட்சம் கோடி என பதிவாகியிருக்கிறது.

• நிகர இலாபம், ஜுன்’23-ல் பதிவான ₹1709 கோடி என்பதிலிருந்து ஜுன்’24-ல் ₹2403 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 41% வளர்ச்சி கண்டிருக்கிறது
• செயல்பாட்டு இலாபம், ஜுன்’23-ல் பதிவான ₹4135 கோடி என்பதிலிருந்து ஜுன்’24-ல் ₹4502 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 9% உயர்ந்திருக்கிறது
• நிகர வட்டி வருவாய், ஜுன்’23-ல் பதிவான ₹5703 கோடி என்பதிலிருந்து ஜுன்’24-ல் ₹6178 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 8% உயர்ந்திருக்கிறது
• கட்டணம் சார்ந்த வருவாய், ஜுன்’23-ல் பதிவான ₹671 கோடி என்பதிலிருந்து ஜுன்’24-ல் ₹788 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 17% உயர்ந்திருக்கிறது
• சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), ஜுன்’23-ல் இருந்த 0.95% என்பதிலிருந்து ஜுன்’24-ல் 25 bps உயர்ந்து 1.20% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
• பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE), ஜுன்’23-ல் இருந்த 17.88% என்பதிலிருந்து ஜுன்’24-ல் 188 bps மேம்பட்டு 19.76% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
• கடன்கள் மீதான வருவாய் (YoA), ஜுன்’23-ல் இருந்த 8.53% என்பதிலிருந்து ஜுன்’24-ல் 16 bps உயர்ந்து 8.69% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
• முதலீடுகள் மீதான வருவாய் (YoI), ஜுன்’23-ல் இருந்த 6.72% என்பதிலிருந்து ஜுன்’24-ல் 43 bps உயர்ந்து 7.15% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
• மொத்த கடன்கள், ஜுன்’23-ல் பதிவான ₹479404 கோடி என்பதிலிருந்து ஜுன்’24-ல் 12% வளர்ச்சி பெற்று ₹539123கோடியாக அதிகரித்திருக்கிறது
• RAM துறைக்கு (ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME) வழங்கப்பட்ட கடன்கள் ஜுன்’23-ல் இருந்த ₹276435கோடி என்ற அளவிலிருந்து ஜுன்’24-ல் ₹313301கோடியாக உயர்ந்து 13% வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது
• மொத்த உள்நாட்டு கடன்களுக்கு RAM-ன் பங்களிப்பு 62% ஆக இருக்கிறது. ரீடெய்ல், விவசாயம், MSME (RAM) ஆகிய பிரிவுகளுக்கான கடன்கள் முந்தைய ஆண்டைவிட முறையே 14%, 18% மற்றும் 6% என அதிகரித்திருக்கின்றன. முந்தைய ஆண்டைவிட வீட்டுக்கடன் (அடமானம் உட்பட) 13%, வாகனக்கடன் 55% என அதிகரித்திருக்கின்றன
• ஒழுங்குமுறை தேவைப்பாடான 40%-க்கு எதிராக ANBC-யின் ஒரு சதவீதமாக 43% பதிவுடன் முன்னுரிமை துறைக்கான கடன்கள் ₹179664 கோடி என பதிவாகியிருக்கிறது
• மொத்த டெபாசிட்கள், ஜுன்’23-ல் இருந்த ₹621539 கோடி என்பதிலிருந்து முந்தைய ஆண்டைவிட 10% வளர்ச்சி கண்டு ஜுன்’24-ல் ₹681183 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் CASA & சேமிப்பு டெபாசிட் 6% மற்றும் நடப்பு டெபாசிட் 5% என்ற அளவில் அதிகரித்திருக்கிறது
• 30 ஜுன்’24 அன்று உள்நாட்டு CASA விகிதம் 41% என பதிவாகியிருக்கிறது
• 30 ஜுன்’24 அன்று CD விகிதம் 79% என பதிவாகியிருக்கிறது
• GNPA (மொத்த வாராக்கடன்கள்) ஜுன்’23-ல் இருந்த 5.47% லிருந்து முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 170 bps குறைந்து 3.77% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) ஜுன்’23-ல் இருந்த 0.70% லிருந்து ஜுன்’24-ல் 31 bps குறைந்து 0.39% ஆக பதிவாகியிருக்கிறது
• வாரா ஐயக்கடன்களுக்கான (PCR) நிதி ஒதுக்கீட்டு விகிதம் (TWO – தொழில்நுட்ப கடன் தள்ளுபடி உட்பட, PCR), ஜுன்’23-ல் இருந்த 95.10% லிருந்து ஜுன்’24-ல் 156 bps அதிகரித்து 96.66% ஆக முன்னேற்றம் கண்டிருக்கிறது
• ஜுன்’23-ல் 1.57% ஆக இருந்த நழுவல் விகிதம் ஜுன்’24-ல் 1.50% ஆக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது
• மூலதன போதுமான நிலை விகிதம் 69 bps முன்னேற்றம் கண்டு 16.47% ஆக பதிவாகியிருக்கிறது. CET-I, முந்தைய ஆண்டைவிட 111 bps உயர்ந்து 13.42% ஆக பதிவாகியிருக்கிறது மற்றும் அடுக்கு I மூலதனம் 105 bps வளர்ச்சி கண்டு 13.93% என்ற அளவில் இருக்கிறது

• நிகர இலாபம், மார்ச்’24-ல் பதிவான ₹2247 கோடி என்பதிலிருந்து ஜுன்’24-ல் ₹2403 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 7% வளர்ச்சி கண்டிருக்கிறது
• செயல்பாட்டு இலாபம், மார்ச்’24-ல் பதிவான ₹4305 கோடி என்பதிலிருந்து ஜுன்’24-ல் ₹4502 கோடியாக முந்தைய காலாண்டைவிட 5% அதிகரித்திருக்கிறது
• நிகர வட்டி வருவாய், மார்ச்’24-ல் பதிவான ₹6015 கோடி என்பதிலிருந்து ஜுன்’24-ல் ₹6178 கோடியாக முந்தைய காலாண்டைவிட 3% உயர்ந்திருக்கிறது
• சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), மார்ச்’24-ல் இருந்த 1.15% என்பதிலிருந்து ஜுன்’24-ல் 1.20% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
• முதலீடுகள் மீதான வருவாய் (YoI), மார்ச்’24-ல் இருந்த 6.88% என்பதிலிருந்து ஜுன்’24-ல் உயர்ந்து 7.15% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
• உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), மார்ச்’24-ல் இருந்த 3.52% என்பதிலிருந்து ஜுன்’24-ல் வளர்ச்சி கண்டு 3.53% ஆக அதிகரித்திருக்கிறது
• வருவாய்க்கான செலவு விகிதம் மார்ச்’24-ல் இருந்த 47.99% என்பதிலிருந்து ஜுன்’24-ல் 368 bps வளர்ச்சி கண்டு 44.31% ஆக அதிகரித்திருக்கிறது
• GNPA (மொத்த வாராக்கடன்கள்) மார்ச்’24-ல் இருந்த 3.95% லிருந்து முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 18 bps குறைந்து 3.77% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) மார்ச்’24-ல் இருந்து 0.43% லிருந்து ஜுன்’24-ல் 4 bps குறைந்து 0.39% ஆக பதிவாகியிருக்கிறது

 

வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள்:

• இவ்வங்கி, 3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட உள்நாட்டில் 5846 கிளைகளைக் கொண்டிருக்கிறது; இக்கிளைகளுள் 1983 கிராமப்புறங்களிலும், 1531 சிறு நகரங்களிலும், 1173 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1159 பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் ஒரு IBU-யும் இருக்கிறது.
• இவ்வங்கி, 5093 ஏடிஎம்கள் மற்றும் பிஎன்ஏ-களையும் மற்றும் 11945 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டு செயலாற்றுகிறது.

டிஜிட்டல் வங்கிச்சேவை:

• Q1FY25-ல் டிஜிட்டல் சேனல்கள் வழியாக ₹36,678 கோடி பிசினஸ் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவரை மொத்தத்தில் 84 டிஜிட்டல் பயணங்கள், பயன்பாடுகள் மற்றும் செயல்முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
• மொபைல் பேங்கிங் சேவையின் பயனாளிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 33% உயர்ந்து 1.75 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
• UPI பயனாளிகள் மற்றும் நெட் பேங்கிங் பயனாளிகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டும் முந்தைய ஆண்டைவிட (YoY) 30% & 26% அதிகரித்து முறையே 1.85 கோடி மற்றும் 1.09 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது.
• கடன் அட்டை பயனாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டின் அளவைவிட 40% அதிகரித்து 2.38 இலட்சமாக உயர்ந்திருக்கிறது; PoS முனையங்களின் மொத்த எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 66% அதிகரித்து 21,656 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்:

• ACI சவுத் ஏசியா கன்வெர்ஜ் 2024 நிகழ்வில் சிறந்த வாடிக்கையாளர் அனுபவ முன்னெடுப்புகள் விருது (பொதுத்துறை வங்கி) என்பதை இவ்வங்கி பெற்றிருக்கிறது.
• நிதியாண்டு 24-க்காக SGH இணைப்பு நிலையின்கீழ் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் வங்கிகளாக ஸ்பான்சர் செய்யப்பட்ட இரு RRB-களோடு சேர்த்து இந்தியன் வங்கி நபார்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
• 112% வருடாந்திர இலக்கை (FY24) எட்டி சாதித்ததற்காக தொலைநோக்கு பார்வையுள்ள சாதனையாளருக்கான APY வருடாந்திர விருதை இவ்வங்கி பெற்றிருக்கிறது.

எமது கூர்நோக்கம்

வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு திறனதிகாரம் பெற்ற பணியாளர்களின் அறிவுக்கூர்மை மற்றும் தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாட்டின் வழியாக மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் பொருத்தமான தீர்வுகளை வழங்குவதே எமது கூர்நோக்கம். மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையின் கலவை வழியாக வங்கி செயல்பாடுகளை எளிமையாக்குவதும் அனைவருக்கும் எளிதாக அணுகக்கூடியதாக, வசதியானதாக மற்றும் பாதுகாப்பானதாக ஆக்குவதும் எமது நோக்கமாகும். சிரமமற்ற, சவுகரியமான வங்கிச் சேவை அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெறுமாறு ஏதுவாக்குவதற்கு பல்வேறு டிஜிட்டல் திட்டங்களின் தொகுப்பை எமது வங்கி அறிமுகம் செய்திருக்கிறது. பல்வேறு அம்சங்களின் விரிவான தொகுப்பைக் கொண்ட INDSMART என்ற புதிய ஆம்னி சேனல் பேங்கிங் செயலி வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைக்கப்பட்ட பில் பேமெண்ட், பே டு கான்டாக்ட் (தொடர்பு நபருக்கு பணம் செலுத்துவது), இ-ஷாப்பிங் / எம்-ஷாப்பிங், கிராஸ் பிளாட்ஃபார்ம் அணுகுவசதி, கோல் பிளானர் போன்ற அம்சங்களை இச்செயலி கொண்டிருக்கிறது. மேலும் ஒற்றை கிளிக் செய்வதன் மூலம், கடன்களுக்கு ஒருவரால் விண்ணப்பிக்க இயலும். வேளாண் கடன், நகைக்கடன், சிசு முத்ரா, தனிநபர் கடன், MSME & KCC கடன்களை புதுப்பித்தல், குறித்த கால டெபாசிட்டுகள் மற்றும் சேமிப்பு கணக்குகளை தொடங்குதல் என பல்வேறு சேவைகளை பெறமுடியும். குறைந்த செலவிலான டெபாசிட்டுகளை பெறுவதற்கு, இந்தியாவின் முக்கிய நகரங்களை கடப்பாடுக்கான தனிப்பிரிவுகளை வங்கி நிறுவியிருக்கிறது; மதிப்புமிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளுக்கு பிரத்யேக சேவை நேர்த்தியாக கிடைப்பதை உறுதிசெய்வது இதன் இலக்காகும்.

ஒருகூரையின்கீழ் நிதி திட்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பையும் வழங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் வழியாக நேர்மறையான மாற்றத்தை முன்னெடுக்கும் நம்பகமான கூட்டாளியாகத் திகழ்வது எமது நோக்கமாகும். தொடர்ந்து மாற்றம் கண்டு வருகிற நிதிசார் தளத்தில் எமது வாடிக்கையாளர்கள் சிறப்பான சேவையைப் பெற்று வளர்ச்சி காண்பதற்கு ஏதுவாக்குவதன் வழியாக இதை சாத்தியமாக்குவது எமது குறிக்கோளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *