காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோட்டில் ‘மா காவேரி கருத்தரிப்பு மையம்’ தொடக்கம்

சென்னை: ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனை, கருத்தரித்தல் மற்றும் கருவுறுதல் தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு சிறந்த மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக மா காவேரி கருத்தரிப்பு மையம் தொடங்கியுள்ளது. அனுபவம் வாய்ந்த நிபுணர் மருத்துவக் குழுவுடன் அதிநவீன உபகரணங்கள் உட்பட உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், இந்த மேம்பட்ட கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன், புதிய அதிநவீன மையத்தை திறந்து வைத்து, ‘குழந்தை பெற விரும்பும் தம்பதிகளுக்குப் தொழில் நுட்பத்துடன் கூடிய மா காவேரி கருத்தரிப்பு மையம், உறுதியான நம்பிக்கை கொடுத்து உள்ளது’ எனப் பாராட்டினார்.

கருத்தரிப்பு மையமானது முழு வசதியுடன் கூடிய கரு ஆய்வகம், அதிநவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள், மேம்பட்ட நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் பரந்த அளவிலான நடைமுறைகளுக்கான நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது இன்ட்ரா கருப்பை கருவூட்டல் (IUI), இன் விட்ரோ கருத்தரித்தல் (IVF) மற்றும் இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் விந்தணு ஊசி (ICSI) போன்ற உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப (ART) சிகிச்சைகளை வழங்குகிறது. கூடுதலாக, இந்த மேம்பட்ட கருத்தரிப்பு மையம், கர்ப்பத்தின் வெற்றி விகிதத்தை மேம்படுத்துவதற்காக PCOS உள்ள பெண்களுக்கு உணவு முறை, எடை கட்டுப்படுத்தல், மனநல ஆலோசனை போன்ற முழுமையான ஆலோசனைகளை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் நிர்வாக தலைவர் மருத்துவர் எஸ். சந்திரகுமார், “தம்பதிகளுக்குச் சிறந்த தரமான சிகிச்சைகளை வழங்குவதே  எங்கள் முன்னுரிமை. புதிதாகத் தொடங்கப்பட்ட எங்களின் மேம்பட்ட கருத்தரிப்பு மையம், பெற்றோர் ஆக விரும்பும் தம்பதிகளுக்கு உதவி கரமாக அமையும்.  ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பராமரிப்பை வழங்கும் மிகச்சிறந்த கருவுறுதல் மையமாக இருக்க விரும்புகிறோம். இந்த மையத்தை, மூத்த மருத்துவர், IVF நிபுணருமான P.M. கோபிநாத் அவர்கள் வழிநடத்துகிறார். அவர், ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையின் கருத்தரிப்பு மையத்தின் இனப்பெருக்க மருத்துவ நிபுணர்கள் மருத்துவர் ரம்யா பிரவீன் சந்தர் மற்றும் மருத்துவர் நித்யா P.J. ஆகியோர் இணைந்து பல தம்பதிகளுக்கு தக்க சிகிச்சை வழங்குவதன் மூலம் மகிழ்ச்சியை வழங்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மா காவேரி கருவுறுதல் மையம், அன்பான கவனிப்பின் மூலம் தம்பதிகளுக்கு நம்பிக்கையும், மிக சிறந்த ஆதரவையும் அளிக்கும்” என்றார்.

இருபத்தியேழு ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் பெற்ற, துறை முன்னோடியான, மா காவேரி கருத்தரிப்பு மையத்தின் இயக்குநரும் மருத்துவருமான P.M. கோபிநாத், “மா காவேரி கருத்தரிப்பு மையம் நவீன தொழில்நுட்பத்தையும்,  அன்பான கவனிப்புடன் கூடிய பராமரிப்பையும் ஒருங்கிணைத்து தம்பதிகளுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகளை வழங்குகிறது. அவர்களது பெற்றோராகும் கனவை நனவாக்கிறது. கருத்தரிப்பதில் சிக்கல்கள் உள்ளவர்களுக்கு கருத்தரிப்பதற்கான சிறந்த மற்றும் மேம்பட்ட கருவுறுதல் நுட்பங்களை நாங்கள் வழங்குகிறோம். சர்வதேச தரத்திற்கு இணையாக மிக உயர்ந்த தரமான பராமரிப்பை வழங்க இந்த மையம் தயாராக உள்ளது” என்றார்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள மையத்தின் மூலம், காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோட்டில் அதிசிறந்த மருத்துவ பராமரிப்பையும் நம்பிக்கையையும் வழங்குவதற்கான தனது பணியைத் தொடர்கிறது. இது நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை ஆரோக்கியம், எலும்பியல், மூட்டு புனரமைப்பு, சிறுநீரகவியல், மற்றும் பிற சிறப்பு மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சை முறைகளை  வழங்கும் ஒரு முன்னணி மருத்துவமனையாகும். அனுபவமிக்க மருத்துவர்கள், 50+ தீவிர சிகிச்சை படுக்கைகள், 20+ பச்சிளம் குழந்தைகளுக்கான படுக்கைகள், 7+ அறுவை சிகிச்சை அறைகள், மேம்பட்ட கேத் லேப், 3T MRI மற்றும் 4K + 3D நியூரோ மைக்ரோஸ்கோப் போன்ற கருவிகள் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ வசதிகளுடன், அவசர சிகிச்சை மற்றும்  24/7 டயாலிசிஸ் வசதிகள் கொண்ட மருத்துவமனை ஆகும். இது உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *