மைச்சாங் சூறாவளி தாக்கத்தின் போது NDRF குழுவினரின் விரைவான மீட்புப் பணிகளும், காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோட்டில் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பெண் குழந்தையின் பிறப்பும்…

மைச்சாங் சூறாவளியானது நகரம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இத்தகைய இக்கட்டான சூழலுக்கு மத்தியில் மனதைக் கவரும் ஒரு  உண்மை சம்பவம். மடிப்பாக்கம் குபேரன் நகரில் வசித்து வரும் திருமதி கற்பகம் கண்ணன் என்ற பெண் தனது கர்ப்ப காலத்தின் இறுதி கட்டத்தில் இருந்த சமயத்தில் அவரது வீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து அவரை பத்திரமாக மீட்டனர். அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தெருக்களில் படகு மூலம் சவாரி செய்து, அவரை சரியான நேரத்தில் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர். பிறகு 45 நிமிடங்கள் படகு சவாரி செய்து நேரத்தை வீணாக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் தம்பதியின் வேண்டுகோளின் அடிப்படையில் திருமதி கற்பகத்தை அழைத்துச் செல்ல, காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டில் இருந்து ஆம்புலன்ஸ் அனுப்பிவைக்கப்பட்டது   மா காவேரியின் துறை தலைவர் மற்றும் மூத்த மருத்துவ ஆலோசகரான டாக்டர் தென்றல் கர்ப்பிணியின் வரலாற்றைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்ததால், திருமதி கற்பகத்திற்கு விரைவாக சிகிச்சை அளித்தார்.

சிறிது நேரத்திலேயே திருமதி கற்பகத்திற்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தது. சரியான நேரத்தில் தாய் மற்றும் சேய் உயிரை காப்பாற்றியதற்கு NDRF குழு, தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் முயற்சியே காரணம்.

“பேரழிவை ஏற்படுத்திய சூறாவளிக்கு மத்தியில் NDRF மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் வெளிப்படுத்திய ஊக்கமும் அர்ப்பணிப்பும் அவர்கள் பெரும் போராளிகளுக்கு ஈடானவர்கள்,” என்பதை எடுத்துரைத்த பெண் குழந்தையின் தந்தையான திரு கண்ணன், தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். “மருத்துவமனைக்கு நாங்கள் வந்தடைந்ததை உறுதி செய்த அனைவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், கவலையும் பயமும் நிறைந்த நிலையில் எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது,” என்று கூறி நெகிழ்ந்தார்.

திருமதி கற்பகம் அவர்களும் தனது கணவரின் வார்த்தைகளை ஆமோதித்து, “எனது பாதுகாப்பான பிரசவம் நடைபெற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்த துணிச்சலான வீரர்களுக்கு நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் எனது ஆருயிர் குழந்தைக்கு சரியான நேரத்தில் மருத்துவ பராமரிப்பு வழங்கி சிகிச்சை அளித்த டாக்டர் தென்றல் அவர்களுக்கும் மருத்துவமனையின் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று கூறியுள்ளார்.

மைச்சாங் சூறாவளியின் கடும் சீற்றத்திற்கு இடையே மீட்புப்பணியின் மகத்துவத்தையும் நற்செய்தியையும் எடுத்துரைக்கும் இந்த சம்பவம், உதவும் மனப்பான்மையையும் சவால்களை சமாளிக்கும் மன உறுதியையும் நினைவூட்டுகிறது. ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனை குழுவினர் திருமதி கற்பகம் பாதுகாப்பான பிரசவத்தில் பெண் குழந்தையை பெற்றெடுக்க உதவ முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைவதோடு, அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் பெற வாழ்த்துகிறோம். காவேரி மருத்துவமனை ஊழியர்கள் இந்த இக்கட்டான நேரத்தில் இதுபோன்ற பல நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இடைவிடாமல் உழைத்து நம்பிக்கை அளிப்பதில் உறுதி கொண்டுள்ளது.

ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையானது நரம்பியல், இருதயவியல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், இரைப்பை குடல், எலும்பியல், மூட்டு புனரமைப்பு, சிறுநீரகம், சிறுநீரகவியல் மற்றும் பிற சிறப்பு பிரிவுகளில் பிரத்தியேக நிபுணர்கள் குழு மற்றும் 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், மேம்பட்ட கேத் லேப், 3T MRI மற்றும் 4K + 3D நியூரோ மைக்ரோஸ்கோப்பி போன்ற அதிநவீன நியூரோ டயக்னோஸ்டிக் கருவிகள் உட்பட அதிநவீன மருத்துவ வசதிகள், உறுப்பு மாற்று வசதிகள் மற்றும் 24/7 டயாலிசிஸ் பிரிவுடன் கூடிய மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளை வழங்கும் முன்னணி மருத்துவமனை ஆகும். உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் இங்கு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *