கொரட்டூரில் சி.ஹ்.சி பார்மசியின் 6-ஆவது கிளை

ஹெல்த்வாட்ச் டெலிடயாக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான சி.ஹ்.சி (CHC) பார்மசி, சென்னையில் தனது 6-ஆவது கிளையை கொரட்டூர் பகுதியில் தொடங்கியுள்ளது. CHC பார்மசியின் ‘மினி’ வடிவிலான இந்த புதிய கிளை புதன்கிழமை (செப். 23) தொடங்கப்பட்டது.

இந்த புதிய கிளையை நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிதி அதிகாரியுமான சி.ஏ. ஜெயஸ்ரீ காண்டீபன், நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் நலவிரும்பிகள் முன்னிலையில் திறந்து வைத்தார். சென்னையில் சி.ஹ்.சி பார்மசியின் விரைவான வளர்ச்சிப் பயணத்தில் இது மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

இதுகுறித்து ஜெயஸ்ரீ காண்டீபன் கூறுகையில், “கொரட்டூரில் தொடங்கப்பட்டுள்ள சி.ஹ்.சி பார்மசி மினி கிளை, அடுத்தகட்ட சுகாதார சேவைகளை அதிகமான மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும் எங்களது இலக்கை நோக்கிய மற்றொரு முன்னேற்றமாகும். ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள எங்களது கிளைகளுக்கு மக்கள் அளித்த அதே ஆதரவையும் அன்பையும் இந்த புதிய கிளைக்கும் வழங்குவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், செயல்பாடுகளுக்கான துணைத் தலைவருமான பி. ஆனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், “கொரட்டூர் பகுதி மக்களுக்கு இந்த பிரபலமான சேவையை விரைவாகக் கொண்டு வர நாங்கள் கடுமையாகப் பணியாற்றி வந்தோம். அதே அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் அவர்களுக்கு சேவை செய்யத் தயாராகவும், ஆர்வமாகவும் உள்ளோம்” என்றார்.

இந்த புதிய கிளை மூலம் சென்னையின் சுகாதாரத் துறையில் மட்டுமின்றி, சி.ஹ்.சி பார்மசி தனது சேவையை படிப்படியாக விரிவுபடுத்தி வரும் குடியிருப்புப் பகுதிகளிலும் நிறுவனத்தின் இருப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது. நம்பிக்கை, வசதி மற்றும் மக்களை மையமாகக் கொண்ட சுகாதார சேவைகளை, தரமான மருந்துகல் மற்றும் இன்றி வீட்டுக்கு தேவையான அனைத்து ஆந்தியாவசிய பொருட்களையும் வழங்குவதன் மூலம் சி.ஹ்.சி பார்மசி மக்களிடையே நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

ஏற்கெனவே சி.ஹ்.சி பார்மசி தனது கிளைகளை மேற்கு மாம்பலம், வளசரவாக்கம், முகப்பேர் மேற்கு, விருகம்பாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது கொரட்டூரில் தொடங்கப்பட்டுள்ள கிளை, விரைவாக வரவேற்பைப் பெற்று வரும் சி.ஹ்.சி பார்மசி மினி வடிவிலான புதிய கிளையாகும்.

இந்த ‘மினி’ வடிவமைப்பின் மூலம் மருந்துகள், நலவாழ்வுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சுகாதாரப் பொருட்களை கடையில் பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரத்தில் பல்வேறு சுகாதார சேவைகள் வீட்டிலேயே வழங்கப்படுகின்றன. இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனை அல்லது கிளினிக்கிற்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியம் குறைகிறது.

சி.ஹ்.சி பார்மசியின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான டாக்டர் எஸ். செந்தில் காண்டீபன் கூறுகையில், “இன்றைய குடும்பங்களின் மாறிவரும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே சி.ஹ்.சி பார்மசி மினி உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் தற்போது நம்பகமான சுகாதார ஆதரவை விரைவாகவும், எளிதாகவும், தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே பெற விரும்புகின்றனர். இந்த சேவை வடிவத்தின் மூலம் உயர்தர மருந்துகள், நலவாழ்வுப் பொருட்கள், அத்தியாவசிய சுகாதாரப் பொருட்கள் மற்றும் எங்களது புதிய பிராண்டான சி.ஹ்.சி ஃபார்மாஷ்யூர் மூலம் சான்றளிக்கப்பட்ட இயற்கை வேளாண்மைப் பொருட்களையும் வழங்குகிறோம். இதனுடன் பல்வேறு சுகாதார சேவைகளையும் நேரடியாக மக்களின் வீடுகளுக்கே வழங்குவதன் மூலம் சுகாதார சேவைகளை மிக எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறோம்” என்றார்.

வழக்கம்போல சி.ஹ்.சி பார்மசி விரைவான வீட்டு விநியோக சேவை, நீட்டிக்கப்பட்ட செயல்பாட்டு நேரம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான தனிப்பட்ட ஆதரவு ஆகியவற்றையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.மேலும், நிறுவனம் ‘மாற்று மருந்து வழங்கக் கூடாது’ என்ற கொள்கையை கண்டிப்புடன் பின்பற்றி வருகிறது. இதன்படி மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள், அதே மருந்தாகவே வழங்கப்படுகின்றன. மருத்துவர்களின் பரிந்துரைக்கு மாற்றாக வேறு மருந்துகள் வழங்கப்படுவதில்லை.நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறையான சுகாதார நடைமுறைகளில் நிறுவனம் காட்டி வரும் இந்த உறுதிப்பாடு, சி.ஹ்.சி பார்மசி மக்கள் மத்தியில் வேகமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் வளர்ச்சி பெறுவதற்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மேலும், நோயறிதல் பரிசோதனைகள், இதயக் கண்காணிப்பு, ரத்தப் பரிசோதனைகள், உடலியக்க சிகிச்சை, மருத்துவர்களின் ஆலோசனை, செவிலியர் சேவை மற்றும் வீட்டு சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் ஒருங்கிணைந்த சுகாதாரச் சேவை கட்டமைப்பையும் நிறுவனம் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

டாக்டர் செந்தில் காண்டீபன் மேலும் கூறுகையில், “எங்களைப் பொறுத்தவரை சுகாதாரம் என்பது நம்பிக்கை, எளிதில் அணுகும் வசதி மற்றும் நாங்கள் சேவை செய்யும் சமூகங்களுடன் நீண்டகால உறவை உருவாக்குவது தொடர்பானதாகும். ஒவ்வொரு புதிய கிளையும் குடும்பங்களுக்கு நம்பகமான சுகாதார சேவை கூட்டாளியாகத் திகழ்வதற்கும், தரமான சுகாதார சேவைகள் அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே கிடைப்பதை உறுதி செய்வதற்குமான எங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது” என்றார்.

சி.ஹ்.சி பார்மசி மினி தற்போது சென்னை கொரட்டூர் அய்யப்பா நகரில், எண். 1, 2-ஆவது தெரு, 200 அடி உள்வட்டச் சாலை, அய்யப்பா நகர், கொரட்டூர், சென்னை – 600 076 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.

ஆர்டர்கள், விசாரணைகள் மற்றும் சுகாதார சேவைகளுக்கு 7430033003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், சி.ஹ்.சி பார்மசி இணையதளத்திலும் சேவைகளைப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *