அகில பாரதிய சிக்ஷா சமகம் 2023 மற்றும் தேசிய கல்விக் கொள்கையின் 3-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் 106 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதோடு பல துறைகளில் புதுமையான கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் அறிவு பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், மத்திய கல்வித்துறை இணையமைச்சர்கள் திரு.சுபாஷ் சர்க்கார், திருமதி அன்னபூர்ணா தேவி மற்றும் திரு.ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோர் முன்னிலையில் இந்த கையெழுத்து கையெழுத்தானது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு: சிபிஎஸ்இ-யின் கீழ், திறன் மேம்பாடு மற்றும் கல்வியில் குறிப்பிட்ட கவனம் செலுத்த பல்வேறு நிறுவனங்களுடன் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய சைகை மொழியை ஊக்குவிக்க இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. பல மாநிலங்களின் பள்ளிக் கல்வித்துறையுடன், இ-வித்யா முன்னெடுப்பின் கீழ், என்.சி.இ.ஆர்.டி 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. உயர்கல்வி: உயர்கல்வித் துறையில், இந்திய அறிவு முறையை மேம்படுத்த 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் (என்இடிஎஃப்) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவற்றின் கீழ் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பல்வேறு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் யுஜிசி 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்: பல்வேறு நிறுவனங்களுடன் மொத்தம் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒத்துழைப்புகள் இளைஞர்களுக்கு அதிநவீனத் திறன்களை வழங்குவதற்கும், கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், மத்திய அரசு கொண்டுள்ள உறுதியைக் குறிக்கின்றன. (Release ID : 1944173) AP/ CR/KRS (Release ID: 1944191) Read this release…