கேன்சர் சர்வைவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை முன்னெடுத்த நற்செயல்!

புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோயல்ல. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் போது இலக்கு சிகிச்சை, மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் இப்போது அதிகமான மக்கள் புற்றுநோயிலிருந்து குணமாகலாம்.

பில்ரோத் மருத்துவமனை 30 வருடங்களுக்கும் மேலாக புற்றுநோயியல் துறையில் யோமன் சேவையை வழங்கி வருகின்றது.

இந்த மாதம் பிங்க் அக்டோபரைக் கருத்தில் கொண்டு, நிர்வாக இயக்குநர் டாக்டர்.ராஜேஷ் ஜெகநாதன் அவர்கள் கேன்சர் சர்வைவர்களின் நல்வாழ்வை மேம்படுத்த 22.10.2023 ஞாயிற்றுக்கிழமை PVR இன் அனைத்து திரைகளிலும் இந்த வாரம் வெளியாகியுள்ள நடிகர் விஜயின் ‘லியோ’ படத்திற்கான 4500 டிக்கெட்டுகளை வழங்கியுள்ளார். சர்வைவர்களுக்கு மட்டுமல்லாமல் மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள், பணியாளர்கள், வார்டு உதவியாளர்கள் தங்கள் முழு குடும்பத்துடன் படம் பார்க்கும்படி உணவு கூப்பன்களுடன் ஏற்பாடு செய்துள்ளார்.

“பில்ரோத் குடும்பமாகிய நாங்கள் கருணை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயத்தை நம்புகிறோம். இது எங்கள் அன்புக்குரிய எம்.டி. டி.ஆர். ராஜேஷ் ஜெகநாதனின் முதன்மையான நோக்கம். பில்ரோத் கோட்டையை இன்றும் என்றென்றும் சிறப்பாக வைத்திருக்க இதுவே எங்களுக்கு உதவுகிறது. தனது ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் காட்டிய அன்பிற்காக நாங்கள் எங்கள் எம்.டி.க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்”

வாருங்கள் நாம் ஒன்று சேர்ந்து புற்று நோயை வலிமையுடனும், வீரத்துடனும் போராடி வெல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *