விருதுநகரில் பயங்கரம் பட்டப்பகலில் வாலிபர் அரசுப் பேருந்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஓடும் அரசுப்பேருந்தில் துப்பாக்கியால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் காந்தாரி முத்து. இவரது மகன் கருப்பசாமி (வயது35). இவர் இன்று காலை வெளியூர் செல்வதற்காக நெல்லையில் இருந்து கோவைக்கு சென்ற அரசு பஸ்சில் ஏறினார்.

அதே பேருந்தில் பின் சீட்டில் அமர்ந்திருந்த இருவருக்கும் கருப்பசாமிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த வாக்குவாதம் முற்றவே சாத்தூர் படந்தால் விலக்கு அருகே பஸ் சென்று கொண்டு இருக்க்ம் போது அதில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கருப்பசாமியை சுட்டதாக தெரிகிறது. இதில் கருப்பசாமியின் தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அரசு பேருந்தில் திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டு பயணிகள் பீதியில் அலறினர். பேருந்தை ஓட்டுநர் நிறுத்தவே, துப்பாக்கியால் சுட்டவர்கள் இறங்கி தப்பி ஓடி விட்டனர். தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருவகின்றனர்.