ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று நடிகர் சங்கம் சார்பில் மவுன போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப் பட்டதை கண்டித்து இளைஞர் களால் நடத்தப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் நேற்று மவுனப் போராட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி, கமல், அஜித், சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.

முன்னதாக இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த கமல்ஹாசன், “சினிமா நட்சத்திரங் கள் இப்போராட்டத்தில் பங்கெடுத்து அந்த ஒளியை வாங்கிக் கொள்ளக் கூடாது என நினைக்கிறேன். இது அவர்களுடைய போராட்டம்” என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து நேற்று நடிகர் சங்கம் தங்கள் போராட்டத்தை மவுனப் போராட்டமாக நடத்தியது.

இந்த போராட்டம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், “இப் போராட்டத்தின் காரணகர்த்தாக் கள் அதோ வெயிலிலும் பனியி லும், பசியிலும் சிதறாமல் கூடி யிருக்கும் மாணவர்கள்தான். அவர்கள்தான் மக்களால் அறியப் பட வேண்டியவர்கள், அவர்கள் கருத்துகள்தான் கேட்கப்பட வேண் டியவை. ஆகவே, எங்களுடைய போராட்டத்துக்கு யாரும் செய்தி சேகரிக்க வர வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.

நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்ற மவுனப் போராட்டத் தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், பிரபு, சத்யராஜ், பார்த் திபன், அஜித், சூர்யா, சிவகார்த் திகேயன், த்ரிஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்ட யாரும் எதையும் பேசவில்லை. அறவழியில் முழு ஆதரவை வெளிப்படுத்தினர். விஜய், விக்ரம், விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்ளவில்லை.

இந்த மவுன போராட்டத்தின் முடிவில் நடிகர் சங்கம் சார்பில் அதன் துணைத்தலைவர் பொன்வண் ணன் பேசுகையில், ‘‘நடிகர் சங்க உறுப்பினர்கள் யாரும் பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இல்லை. நிர்வாகத்துக்கு தெரியா மல் அப்படி யாராவது உறுப்பின ராக இருந்தால் உடனடியாக வெளியேறுமாறு வேண்டுகோளாக வைக்கிறோம்!’’ என்றார்.

மெரினா கடற்கரையில் இளை ஞர்கள் நடத்திவரும் போராட்டத் தில் சூர்யா உள்ளிட்ட சில நடி கர்கள் நேற்றும் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவைத் தெரி வித்தார்கள். நடிகர் லாரன்ஸ், ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பா ளர் டி.இமான் ஆகியோர் போராட்ட களத்தில் இருந்து வரும் இளைஞர்களோடு இருந்து சாப் பாடு, மருத்துவ உதவிகள் உள் ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். நடிகர் விவேக், போராட்டத்தில் கலந்துகொண்ட வர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், சாப்பாடு மற்றும் தொப்பிகள் ஆகியவற்றை வழங்கினார்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நடிகர் சங்க வளாகத்தில் நேற்று மவுனப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், சிவகுமார், பிரபு, அஜித், ரகுமான், சூர்யா.