மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வை தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு அதிரடி

மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வை தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு அதிரடி

மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:

மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) பிராந்திய மொழிகளிலும் எழுத அனுமதிக்கப்படும்.

அதன்படி 2017-ஆம் ஆண்டுக்கான “நீட்’ தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, வங்க மொழி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடத்தப்படும். மருத்துவப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் மாநில அரசுகள் தங்களுக்கான இடஒதுக்கீட்டைத் தீர்மானித்துக் கொள்ளலாம். இது விஷயத்தில் மாநில அரசின் கொள்கைகளில் தலையீடு இருக்காது என்றார் அவர்.

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…