டெல்லியில் இளம் பெண் கத்தியால் குத்திக் கொலை

டெல்லியில் புராரி என்ற இடத்தை சே0ர்ந்தவர் கருணா 21 வயது  ஆசிரியை யாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக 34 வயது உடைய சுரேந்தர் என்பவர்  பொஇன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்

இந்த் நிலையில்  இன்று  சுரேந்தர்  ஆசிரியை கருணாவை 22 க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தினார். உடனடியாக அந்த பெண்ணை அவரது உறவினர்கள் டெல்லியில் உள்ள சுஸ்ருடா அவசர சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.ஆனால்  அந்த பெண் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் .அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அந்த மையத்தின் முன்பு கூடி சோகத்தில் ஆழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிப்படைந்த பெண்ணின் சகோதரர் கூறும் போது

‘ரோகிணி  பகுதியில் ஆதித்யா மாலிக் என்ற இளைஞர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக எனது தங்கையை துன்புறுத்தி வந்தார். அந்த இளைஞர் மீது போலீஸ் நிலையத்தில் கடந்த ஆறு மதங்களுக்கு முன்பு புகார் அளித்து இருந்தோம். அதன் பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்தார். தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது” என்றார்.

இது குறித்து போலீசார் கூறும் போது 5 மாதங்களுக்கு முன் பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்து இருந்தனர் பின்னர் புகாரை வாபஸ் வாங்கி விட்டு இரு குடும்பமும் சமரசமாக போவதாக தெரிவித்தனர் இதை தொடர்ந்து அது குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து உள்ளனர்.