டெல்லியில் காரில் இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது

தெற்கு டெல்லியிலுள்ள மோடி பாக் பகுதியில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.

தனியாக பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அவரை லிஃப்ட் தருவதாகக் கூறி கார் ஓட்டுநர் ஒருவர் காரில் கூட்டிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், “நொய்டாவை சேர்ந்த இளம்பெண் (20) வேலை தேடி டெல்லி வந்துள்ளார்.. டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அருகேவுள்ள பேருந்து நிலையத்தில் புதன்கிழமை இரவு பத்து மணியளவில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக காரில் வந்த நபர், அந்தப் பெண்ணுக்கு லிஃப்ட் அளிப்பதாக அழைத்துச் சென்று இருக்கிறார். பின் டெல்லி மோடி பாக் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி அப்பெண்னை பலாத்காரம் செய்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண் அவரிடமிருந்து எப்படியோ தப்பி வந்து போலீஸாரிடம் புகார் அளித்ததிருக்கிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளியின் வாகனத்தில் உள்துறை அமைச்சகத்தின் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் அரசு பணியாளர் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.