நடிகர் சந்தானத்தின் அடுத்த படத்தை வி.டி.வி.கணேஷ் தயாரிக்கிறார்

பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் காமெடி நடிகர் சந்தானம், அடுத்ததாக நடிகர் விடிவி கணேஷ் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தை, லொள்ளு சபா நிகழ்ச்சியில் இருந்து சந்தானத்துடன் காமெடி வசனம் எழுதிக் கொண்டிருக்கும் சேதுராமன் இயக்குகிறார்.

இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தின் பூஜை இன்று எளிமையான முறையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.