விஜயின் 61 வது படத்தின் தலைப்பு ‘மூன்று முகம்’?

‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என்று இப்படத்தில் மூன்று பேர் ஹீரோயின்களாக நடிக்க, இயக்குநர் எஸ். ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தினை மறைந்த இயக்குநர் இராம.நாராயணின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

தற்போது, சென்னை பின்னி மில்லில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் போஸ்டர் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்திற்கு ரஜினிகாந்தின் படமான ‘மூன்று முகம்’ என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதால், இந்த தலைப்பு தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம்.

ஏற்கனவே, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’, விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘சத்ரியன்’ படத்தின் கதை என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது மூன்று கெட்டப், அதில் ஒன்று போலீஸ் வேடம் என்பதால், இப்படம் ரஜினியின் மூன்று முகம் தழுவலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.