விஜயகாந்த் வீட்டு நாயின் பெயர் கேப்டனாம்

விஜயகாந்த் வீட்டு நாயின் பெயர் கேப்டனாம்:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலக தொடங்கியுள்ளார்கள். மேலும், கட்சியில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், தேர்தலில் தாங்கள் செய்த செலவுக்காக, கட்சி கொடுப்பதாக சொன்ன, தேர்தல் நிதியை கொடுக்கும்படி விஜயகாந்துக்கு கிடுக்குபிடி போட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், தேமுதிக வில் இருந்து பிரிந்து மக்கள் தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய சந்திரகுமார், மக்கள் தேமுதிக-வை திமுக-வுடன் இணைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அக்கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், ”விஜயகாந்த் மகன் வெளிநாட்டில் இருந்து ஒரு நாய் வாங்கியிருக்கிறார். இந்த நாய்க்கு ‛கேப்டன்’ என பெயர் சூட்டி அழைக்கிறார். இது எந்த அளவுக்கு கேவலமானது?,

இதில் இருந்தே விஜயகாந்த் மீது அவரது குடும்பத்திற்கு எவ்வளவு மதிப்பு உள்ளது என்பதை புரிய முடிகிறது.

மேலும் விஜயகாந்த் தனது கட்டுப்பாட்டில் இல்லை” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News