விருதுகளை அள்ளி குவிக்கும் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை தமிழ் திரைப்படம்

ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) ஆம் ஆண்டு விருதுகளை குவித்த படம் ‘தர்மதுரை’. ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) பட்டியலில் தமிழ் திரைப்பட பிரிவு சார்பாக விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

நவம்பர் 18ஆம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், இந்த விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்திய பிரபலங்கள் பலர் விருது பெறும் வெற்றியாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

தர்மதுரை படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, கதாநாயகன் விஜய் சேதுபதி, நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் இணைந்து நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஸ்டூடியோ 9 ஆர்.கே சுரேஷ் தயாரிப்பில் உருவான இப்படம் சிறந்த படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த படம் – தர்மதுரை; சிறந்த இயக்குனர் – சீனு ராமசாமி; சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி; சிறந்த நடிகை – தமன்னா. மேலும், தமிழ் பிரபலங்களான எமி ஜாக்சன், பேபி நைநிகா உள்ளிட்டோரும் விருது பெறுவோர் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

More