விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி விரைவில் கைது செய்ய படுவார்கள்: இங்கிலாந்து பிரதமர் உறுதி

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, இங்கிலாந்தில் பதுங்கியுள்ள இந்திய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து அவர் குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இரு நாடுகளிலும் குற்றவாளிகளை நாடு கடத்தும் விவகாரத்தை கவனித்து வரும் இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்துப் பேச உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, லண்டனில் பதுங்கியுள்ள இந்திய குற்றவாளிகள் நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.

இதில் முக்கியமாக, இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவும், ஐபிஎல் கிரிக்கெட்டில் பல ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு, தற்போது லண்டனில் தலைமறைவாக இருக்கும் லலித் மோடியையும் முதலில் கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இவர்களுடன், மேலும் 57 பேருடைய பட்டியல் ஒன்றையும் தயார் செய்துள்ள மத்திய அரசு, அதை இங்கிலாந்திடம் ஒப்படைத்துள்ளது.