ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டுவர வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த சட்டம் கொண்டுவர வெண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர்களின் எண்ணம் ஈடேற முயற்சிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.  தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசும் மத்திய அரசுக்கும் துணை போவதாக மக்கள் எண்ணுகிறார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்திலேயே சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கை அதிமுக அரசு அக்கறையுடன் கையாளவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்  வீர விளையாட்டு பற்றி வரலாற்று சான்றுகளை நீதிபதிகளிடம் வாதாட அதிமுக அரசு தவறிவிட்டது என்றும் அவர் கூறினார். தமிழக இளைஞர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சார அடையாளம் என்று ஸ்டாலி்ன் கூறியுள்ளார்.

More