உயிரே நீயும் பிரியாதே கிராமிய இசை வெளியீட்டு விழா

M.S.K Music தயாரிப்பில் “உயிரே நீயும் பிரியாதே” கிராமிய பாடல்கள் இசை வெளியீட்டு விழா சென்னையில் வடபழனி தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது. கலைப்பட்டறை எஜுகேஷனல் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைத்திருந்த இந்த விழாவில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் சங்கர்கணேஷ் அவர்கள் “உயிரே நீயும் பிரியாதே” இசைக்குறுந்தகடை வெளியிட பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் சினேகன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். திரைப்பட இசையமைப்பாளர்கள் சௌந்தர்யன்,இலக்கியன்,திரைப்பட இயக்குநர் வ.கீரா போன்றோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் முன்னதாக கலைப்பட்டறை எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் பி.இயேசுதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் “உயிரே நீயும் பிரியாதே” கிராமிய பாடல்களுக்கு நடன நிகழ்ச்சிகளும், பறையாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பிரவீன்குமார் இசையமைத்து கருங்குயில் கணேசன் எழுதிய பாடல்களை பொன்னூஞ்சல்,தாமரை,கந்தபுராணம், டார்லிங் டார்லிங் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்த சின்னத்திரை நடிகை ஆனந்தியும் பிரபல நாட்டுப்புற பாடகரான கருங்குயில் கணேசனும் மண்வாசனையுடன் இளைய தலைமுறையை கவரும் வண்ணம் பாடி இருக்கின்றனர்.

பாடகியும் நடிகையுமான ஆனந்தி வசந்த்,சத்தியம்,இமயம்,பொதிகை,தீபம் போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.