முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு மற்ற மாநிலங்களும் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த 20 மாநில முதல்வர்கள் தமிழகம் வருகை தரவுள்ளனர். மேலும் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், பிகார் மாநிலங்களில் இன்று ஒருநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுதாக அறிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் இரங்கள் தெரிவித்துள்ளனர். பல்லாயிரம் மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு மத்திய அரசு ஒருநாள் துக்கத்தை அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நாளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது.

புதுவையில் ஏற்கனவே, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. அத்துடன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கேரளா ஆளுநர் சதாசிவம் தமிழகம் வருதை தரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளனர்.