மீண்டும் படப்பிடிப்புக்கு வருகிறார் உலக நாயகன் கமல் ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தனது வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கும் கமல்ஹாசன் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது தனது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் கமல் ஹாசன், வீட்டில் இருந்தபடியே தனது ‘சபாஷ் நாயுடு’ படத்தின் பின்னணி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில் வரும் நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.