வேலூரில் உறவு முறை மறந்து காதலித்து கர்பமான தங்கை, கொலை செய்த அண்ணன்

வேலூர் அருகே, உறவு முறை மறந்து காதலித்ததில், தங்கை கர்ப்பமானதால், அவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே திருவலம் அடுத்த, 66 புத்தூர் ஊராட்சி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தாமோதரன், 45. இவர் மனைவி கற்பகம், 35. இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களது, 17 வயது மகள், பிளஸ் 2 முடித்து விட்டு டெய்லரிங் படித்து வந்தார். ஆந்திர மாநிலம், குப்பத்தை சேர்ந்த முனிசாமி மகன் சபரி, 20. இவருக்கு, தாமோதரனின் மகள் தங்கை உறவு முறை. சபரி அடிக்கடி லட்சுமிபுரத்தில் உள்ள, தாமோதரன் வீட்டுக்கு வந்து செல்வார்.

தனது உறவினர் என்பதால், தாமோதரன் இதை அனுமதித்தார். அப்போது, அண்ணன், தங்கை உறவு முறையை மறந்து சபரியும், அந்த சிறுமியும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றதும், வீட்டில் சிறுமியும், சபரி மட்டும் இருந்தனர். அன்று இரவு, 8:00 மணிக்கு சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். வீடு பூட்டி இருந்தது. மகளை காணாததால், பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். திருவலம் போலீசார் விசாரணை செய்தனர். அதில், சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இறந்து கிடந்த இடத்தில் ஊசியும், விஷ மருந்து பாட்டிலும் இருந்தது. இதனால் போலீசாருக்கு சபரியின் மீது சந்தேகம் வந்தது. உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சபரியிடம் விசாரணை செய்தனர். அதில், கர்ப்பமடைந்த சிறுமி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதற்கு, சபரி மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சபரி, சிறுமியை அடித்து, அவருக்கு விஷ ஊசி போட்டுள்ளார்.

இதில் அவர் மயங்கியதும், துப்பாட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, தூக்கில் தொங்க விட்டு சென்றது தெரியவந்தது. ப்போது வீட்டிற்கு யாரோ வருவதுபோல் தெரிந்ததால் தப்பியோடிய சபரி உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளார்.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.