காஞ்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது டியூட்டி பேட்ரியாட்ஸ்: டி.என்.பி.எல்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்ற லீக் போட்டியில் காஞ்சி வாரியர்ஸ் – டியூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற காஞ்சி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் கவுசிங் அதிகபட்சமாக 43(25) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தூத்துக்குடி அணி சார்பில் அஸ்வின் கிரிஸ்ட் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 16.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தூத்துக்குடி அணியில் கவுசிக் காந்தி அதிரடியாக விளையாடி 80(49) ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

6 போட்டிகளில் விளையாடியுள்ள தூத்துக்குடி அணி தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. காஞ்சி வாரியர்ஸ் அணிக்கு இது 2 வது தோல்வியாகும்.