பெண்களை மயக்கி ஆபாசவிடியோ எடுத்த போலி சாமியார் கைது

உத்தரப்பிரதேசத்தில் பெண்களை மயக்கி ஆபாசவிடியோ எடுத்த போலி சாமியார் கைது

பெண்களை மயக்கி ஆபாசவிடியோ எடுத்த போலி சாமியார் கைது – உத்தரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஹராய் கிராமத்தில் ஆசிரமம் அமைத்து,  குழந்தை வரம் தருவதாக கூறி பல பெண்களை கற்பழித்த போலி சாமியார் ராம் சங்கர் திவாரி கைது செய்யப்பட்டார்.

பரமானந்த பாபா என்ற பெயரில் பல பெண்களை கற்பழித்து சீரழித்த இவர் மீது ஏற்கனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட போது, போதிய ஆதரம் இல்லாததால் இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

இந்த நிலையில், சில பெண்களுடன் இவர் ஆபாசமான நிலையில் உள்ள வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இதுதொடர்பான ஆதாரத்துடன் போலீசாரிடம் உள்ளூரை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அந்த போலி சாமியாரை இன்று கைது செய்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Visit Chennaivision for More Tamil Cinema News