சசிகலா உடனடியாக முதல்வராக வேண்டும் தம்பிதுரை வேண்டுகோள்

அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுக கொள்கைப் பரப்புச் செயலராகவும் இருக்கும் தம்பிதுரை விடுத்திருக்கும் வேண்டுகோளில், அதிமுக பொதுச் செயலர் சசிகலா முதல்வராக பொறுப்பேற்று தமிழ்நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை ஆற்றுவது இன்றியமையாதது தொண்டர்களின் மனநிலையை ஏற்று சசிகலா விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வராக ஆட்சித் தலைமையை சசிகலா ஏற்க வேண்டும்

அதிமுக பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டபிறகு அவர் ஆற்றிய உரை, அதிமுக தொண்டர்களை உருகச் செய்துள்ளது.

ஆட்சித் தலைமை ஒருவரிடமும், கட்சித் தலைமை ஒருவரிடமும் இருப்பது தமிழக மக்களுக்கு உகந்ததாக இல்லை. ஆட்சிப் பொறுப்பும், கட்சிப் பொறுப்பும் ஒன்றாக இருந்தால் தான் ஒருமித்த சிந்தனையுடன் செயல்பட முடியும்.

அதிமுக தொண்டர்கள் கலங்கி நின்ற வேலையில் களங்கரை விளக்கமாய் திகழ்கிறார் சசிகலா. சிந்தித்து தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் தராமல் சசிகலாவால் தான் பணியாற்ற முடியும் என்று தம்பிதுரை கூறியுள்ளார்.