தெலுங்கானா முதல் அமைச்சர் இடத்தில் அமர்ந்த சின்ன ஜீயர் சுவாமி

தெலுங்கானா முதல்வருக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு வீடு மற்றும் அலுவலகம் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த திரப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த டிரிடன்டி ஸ்ரீமன்நாராயணா ராமானுஜா சின்ன ஜீயர் சுவாமியை, முதல்வர் சந்திரசேகர ராவ், முதல்வர் இருக்கையில் அமர வைத்தார்.

சந்திரசேகர ராவின் இந்த நடவடிக்கை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களால் தேர்வு செய்யப்பட்டவருக்கான இருக்கையில் ஜீயரை அமர வைத்தது தவறு என்று சில அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி வருவதால், இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.