தமிழக மக்கள் வதந்திங்களை நம்பாதீர்கள்

மழை மற்றும் புயல் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக வருவாய்த் துறை  செயலாளர் சந்திரமோகன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சந்திரமோகன், பொதுமக்கள் யாரும் புயல் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்.  புயல், மழை குறித்த செய்திகளுக்கு  ஊடகங்கள் மக்கள் கவனிக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க பாதுகாப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

நீர் தேங்கும் பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.