உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதியை எதிர்த்து கவர்ச்சி நடிகை போட்டி

பாலிவுட்டில்  தனது படுகவர்ச்சியால் அனைவரையும் கதிகலகை வைக முயன்றவர் ராக்கி சாவந்த். ஆனால் ஏற்கனவே பாலிவுட்டில் பல கவர்ச்சிப் புயல்கள் வீசுவதால் ராக்கியால் நிலைக்க முடியவிலை.

சினிமா வாய்ப்பு இல்லாததால்  அரசியலுக்கு சென்றார். புது கட்சி ததொடங்கி தேர்தலில் போட்டியிட்டு மண்ணை கவ்வினார். பின்னர் பிரதமர் மோடி உருவம் பிரிண்ட் செய்த ஆடையை  அணிந்து சர்ச்சையில் சிக்கினார். இது குறித்து அவர் மீது புகார் கூறப்பட்டது. சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியில் இடம் பெற்று உள்ள குடியரசு கட்சி சார்பில் உத்தரபிரதேச தேர்தலில் ராக்கி சாவந்த் போட்டியிட போவதாக கூறபட்டது.

இந்த நிலையில் மத்திய அமைச்சரும் குடியரசு கட்சி தலைவருமான  ராமதாஸ் அத்வாலே உத்தரபிரதேச தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை எதிர்த்து நடிகை ராக்கி சாவந்த் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். அத்வாலே ஜி எனது தந்தை போன்றவர்.அவர் என்னை குறித்து  எடுக்கபட்ட முடிவை நான் ஏற்க தயாராக உள்ளேன்.அவர் நான் மாயாவதிக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்றால் நான் அதை செய்வேன்.நான் இது குறித்து அத்வாலே ஜியுடன்  பேசுவேன். என கூறினார்

More

உள்ளாட்சித் தேர்தல் நடத்த திடீர் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கான சுழற்சிமுறை இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். அந்த வழக்கில் கடந்த மாதம் 28–ம் தேதியன்று விசாரணை நடைபெற்றபோதே, ‘‘தேர்தல் தேதியை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துவிட்டு, மறுநாளே வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என அறிவித்ததால், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ஆய்வு செய்யக்கூட கால அவகாசம் இல்லாத சூழல் ஏற்பட்டு விட்டது’’ என்று தெரிவித்தார்கள். அப்போதே நீதிபதி கிருபாகரன் ‘‘உள்ளாட்சி மன்றத் தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே வேட்பு மனு தாக்கலை அறிவித்தது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

புதிய அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தலை நடத்தி முடிக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து அதுவரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், “உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்களுக்கான சுழற்சி முறையிலான இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை. இது, அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது.

மேலும், தமிழ்நாடு பஞ்சாயத்து (தேர்தல்) விதிகள்-1995-ஐ மீறும் வகையில் தேர்தல் அறிவிப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த அரசாணைகளை ரத்து செய்து, சுழற்சி முறையைப் பின்பற்றி முறையான இட ஒதுக்கீடு பிரதிநிதித்துவத்தை வழங்கி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு (அக்.4) ஒத்தி வைத்தார்.

கடந்த 28–9–2016 அன்று நான் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதில் தருவது போல நீதிபதி கிருபாகரனின் தீர்ப்பு அமைந்துள்ளது. அவசர அவசரமாக தேர்தல் தேதியை அறிவித்தது பற்றியும், எதிர்க்கட்சிகளுக்கு போதிய அவகாசம் கொடுக்காதது பற்றியும் நீதிபதி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் இவைகளை எண்ணி பார்க்காமல், தேர்தல் தேதியை அவசர அவசரமாக அறிவித்ததால், தமிழகம் முழுவதுமுள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இரவு பகல் பாராமல் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, வேட்புமனு தாக்கல் செய்ய அதிக சிரமம் எடுத்துள்ளார்கள்.

தேர்தல் பணிகளையும், பிரசாரங்களையும் ஆற்றுவதற்கு அவர்களுக்கு எல்லாம் மேலும் வாய்ப்பு கிடைத்தது என்ற ஆறுதலை இந்த தீர்ப்பு நிச்சயமாக தரும் என்பதில் ஐயமில்லை. உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் பொதுவாக நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற நீதிபதி கிருபாகரன் அளித்துள்ள தீர்ப்பு பெரிதும் வழிவகுக்கும் என்ற வகையில் இந்தத் தீர்ப்பினை நான் முழு மனதோடு வரவேற்கிறேன். ஆனாலும் அ.தி.மு.க. அரசோ, மாநிலத் தேர்தல் ஆணையமோ இந்த நல்ல தீர்ப்பை வரவேற்காமல், வழக்கம்போல் மேல் முறையீடு செய்தாலும் செய்ய கூடும். என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் டெல்லி மேல் சபை தேர்தலுக்கு தடை வருமா?

கர்நாடகத்தில் டெல்லி மேல் சபை தேர்தலுக்கு தடை வருமா? தேர்தல் கமிஷன் விளக்கம்

கர்நாடகத்தில் நடைபெற உள்ள டெல்லி மேல் சபை தேர்தலில், எம்.எல்.ஏ-களுக்கு லஞ்சம் கொடுக்க நடந்த பேரம் தொடர்பான வீடியோ வெளியானதால், எதிர்கட்சிகள் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. ஆனால், காங்கிரசோ தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

கர்நாடகத்தில் டெல்லி மேல் சபை தேர்தலுக்கு தடை வருமா?

கர்நாடகத்தில் டெல்லி மேல் சபை தேர்தலுக்கு தடை வருமா?

இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து டெல்லியில் நேற்று தேர்தல் கமிஷன் கூடி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் மேல்-சபை தேர்தலை தள்ளிவைப்பது இல்லை என்று முடிவு செய்த தேர்தல் கமிஷன், திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 4 உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இந்த 4 இடங்களுக்கு ஆளும் காங்கிரஸ் சார்பில் 3 பேரும், பா.ஜனதா சார்பில் மத்திய அமைச்சர்  நிர்மலா சீதாராமனும் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் ஒருவரும் என 5 பேர் போட்டியிடுகிறார்கள்.

Visit Chennaivision for More Tamil Cinema News

ஆஸ்திரேலிய தேர்தலில் போட்டியிடும் இந்தியர்கள்

வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் போட்டியிடுகின்றனர்.

கிரீன்ஸ் கட்சி சார்பில் இந்திய வம்சாவளி சீக்கியப்பெண் அலெக்ஸ் பாதலும் (வயது 51), தொழிற்கட்சி சார்பில் பிஜி இந்தியப்பெண் லிசா சிங்கும் (43) போட்டியிடுகிறார்கள்.

இந்தியாவில் இருந்து 1989-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறிய சசி பட்டியும், பெங்களூரை சேர்ந்த இந்திய பெற்றோருக்கு பிறந்த ஆஸ்திரேலியர் கிறிஸ் காம்பியனும் தொழிற்கட்சி சார்பில் களம் இறங்கி உள்ளனர்.

ஆஸ்திரேலிய தேர்தலில் போட்டியிடும் இந்தியர்கள்

1994-ம் ஆண்டு இந்தியாவின் பரிதாபாத்தில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய மொகித்குமார் (39), லிபரல் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தின் 150 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், 76 இடங்களை கொண்ட செனட் சபைக்கும் ஒரே நேரத்தில் ஜூலை மாதம் 2ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. 1987-க்கு பின்னர் இரு சபைகளும் ஒரே நேரத்தில் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Visit Chennaivision for More Tamil Cinema News

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்  2016

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்  2016

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016

இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் அதிமுக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. இதனால், அதிமுக அலுவலகம் மற்றும் ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டனில் அதிமுக தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் என்று கொண்டாடி வருகிறார்கள்.

முன்னதாக, இன்று காலை ஜெயா டிவியில் ஜெயலலிதாவின் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று ஜோதிடர்களை வைத்து நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

இதில் ஜெயலலிதாவின் ராசிப்படி லக்னத்திற்கு 6ம் இடத்தில் சனி இருப்பதால் எதிரிகள் நசிந்து போவார்கள். அம்மாவிற்கு வெற்றியே கிடைக்கும் என்றார் ஒரு ஜோதிடர். ஜெயலலிதா 25 வேட்புமனு தாக்கல் செய்தது ஏன்? அதனால் பலன் கிடைக்குமா என்று கேட்கவே? அதற்கு பதில் சொன்ன ஜோதிடர், கேது என்பது புரட்சிகளை கொடுக்க கூடிய கிரகம். அன்றைய தினம் 7, 2 என்ற அமைப்புப்படி இருக்கிறது.

ஏழு மிகவும் ராசியானது சிறப்பான மாற்றத்தை தரும் என்று கூறியுள்ளனர். வாஸ்துபடி ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவின் வெற்றிக்கு சாதகமாக இருக்கிறது என்றும். துன்முகி வருடமானது ஜெயலலிதாவிற்கு சாதகமாகவே இருக்கிறது. நிச்சயம் ஆட்சிமைப்பார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

தற்போது ஜோதிடர்களின் கருத்து பளித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் நிலவரத்தைப் பார்த்தால், அதிமுக தான் மீண்டு ஆட்சி அமைக்கும் என்பது தெரிகிறது.

Visit Chennaivision for More Tamil Cinema News

மீண்டும் வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்த திட்டம்

மீண்டும் வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்த திட்டம்

மீண்டும் வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்த திட்டம்

சென்னை,மே 18 (டி.என்.எஸ்) தமிழகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவுக்காக, தேர்தல் ஆணையன் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் பயன் இல்லாமல் போய்விட்டது என்று சொல்லும் அளவுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு குறைவாக இருந்தது. அதிலும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் வாக்குப் பதிவு மிகவும் குறைவாக இருந்தது.

வாக்குப் பதிவு குறைவுக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக அறிவித்த தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு கேட்கவும் முடிவு செய்துள்ளார்.

இது குறித்து தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், “நகரங்களில் வாக்குப் பதிவில் வாக்காளர்கள் பெருமளவு பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், வாக்குப் பதிவு எதிர்பார்த்த அளவைவிடக் குறைந்துள்ளது.

இதற்கான காரணங்கள் குறித்து ஆராய உள்ளோம். அதன்படி, வாக்காளர்களிடமே வாக்களிக்க இயலாதததற்கான காரணங்கள் குறித்து கருத்துக் கணிப்புகள் நடத்த உள்ளோம். இதன்மூலம், குறைவான வாக்குப் பதிவுக்கான காரணங்கள் கண்டறியப்படும்” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றக் கோரி வழக்கு

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றக் கோரி வழக்கு

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றக் கோரி வழக்கு

சென்னை,மே 18 (டி.என்.எஸ்) கடந்த 16ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நாளை (மே 19) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வாக்கு எண்ணிக்கை மே 19ஆம் தேதி காலை 8 மணிக்கே தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்துத் தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகளை மே 25 அன்றுதான் அறிவிக்க வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதனை அவசரவழக்காக இன்றே (மே 18) விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் இன்று அந்த இயக்கம் வலியுறுத்த உள்ளது.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு, 25ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Visit Chennaivision for More Tamil Cinema News

தேர்தலையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் மதுகடைகளில் விற்பனை அதிகரிப்பு

தேர்தலையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் மதுகடைளில் விற்பனை அதிகரிப்பு

தேர்தலையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் மதுகடைளில் விற்பனை அதிகரிப்பு

தேர்தலையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் மதுகடைளில் விற்பனை அதிகரிப்பு

சென்னை,மே 13 (டி.என்.எஸ்) தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் மதுகடைகளுக்கு வரும் மே 14,15,16 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் திங்கள் கிழமை தேர்தலினால் அரசு விடுமுறை என்பதால், குடிமகன்கள் இப்போது மதுவை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். இதனால் எப்போதும் இல்லாதபடி, டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.

மேலும், சில டாஸ்மாக் கடைகளில் மது வகைகளே காலியாகிவிட்டதால், சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து பலர் மதுவை வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

Visit Chennaivision for More Tamil Cinema News

பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியுமா : அன்புமணி சவால்

பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியுமா : அன்புமணி சவால்

பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியுமா : அன்புமணி சவால்

பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியுமா : அன்புமணி சவால்

தருமபுரி,மே 13 (டி.என்.எஸ்) வாக்களர்களுக்கு பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியுமா? என்று திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு, பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் சவால் விட்டுள்ளார்.

நேற்று தருமபுரியில் நிருபர்களுக்கு அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழ்நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை. 234 தொகுதிகளிலும் அதிமுக, திமுகவினர் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு வாரி இறைக்கிறார்கள்.

நான் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் திமுகவினர் ரூ. 500, அதிமுகவினர் ரூ. 1000 முதல் 2000 வரை புதன்கிழமை இரவு முதல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரே நாளைக்குள் 60 முதல் 70 சதவிகிதம் வீடுகளுக்கு பணம் கொடுத்து முடித்துவிட்டார்கள்.

இதைவிடக் கேவலமான செயல் அரசியலில் இருக்க முடியாது. தேர்தல் ஆணையம் செயல்படவே இல்லை. தொலைபேசியில் புகார் அளித்தால் 2 மணி நேரம் கழித்துதான் வருகிறார்கள். அதற்குள் பண விநியோகம் அந்தப் பகுதியில் முடிந்தே விடுகிறது.

காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். புகார் வந்தால் ஒரு மணி நேரம் கழித்துச் செல்லவே அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டுமானால், புகாருக்குள்ளாகும் வேட்பாளரை போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குற்றம் என ஜெயலலிதாவும், கருணாநிதியும், ஸ்டாலினும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்க இவர்களுக்கு திராணி இருக்கிறதா தேர்தலை நியாயமாக சந்திக்கத் தைரியம் இல்லாதவர்கள் இவர்கள்.

நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் தேர்தல் ஆணைய அலுவலகத்தை மூடிவிட்டுச் செல்லலாம். ஒரு சில தேர்தல் பார்வையாளர்களையும் பணம் கொடுத்து சரிக்கட்டிவிட்டார்கள். பணம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. பல் இல்லாத தேர்தல் ஆணையம் எதற்காக.

தமிழ்நாட்டைப் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள். ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கொள்ளையடித்த பணம் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிகிறது. அவர்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

ஜெயலலிதாவுடன் நேரடி விவாதத்துக்குத் தயார் என்று ஸ்டாலின் அழைத்திருக்கிறார். ஓராண்டாக நான் அழைத்துக் கொண்டே இருக்கிறேன். என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா.

பணம் வாங்க மாட்டோம், கொடுக்க மாட்டோம் என பாமக வேட்பாளர்கள் அனைவரும் வரும் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு அந்தந்தப் பகுதியிலுள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு முன்பாக சத்தியம் செய்ய இருக்கிறோம்.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

தேர்தல் கண்காணிப்பில் இதுவரை ரூ.100 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது

தேர்தல் கண்காணிப்பில் இதுவரை ரூ.100 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது

தேர்தல் கண்காணிப்பில் இதுவரை ரூ.100 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது

தேர்தல் கண்காணிப்பில் இதுவரை ரூ.100 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது

சென்னை,மே 13 (டி.என்.எஸ்) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் இதுவரை ரூ.100 கோடிக்கும் மேலான தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பேரவை தேர்தலில் ஆவணம் இன்றி ஒரு மாநிலத்தில் மட்டும் கைப்பற்றப்பட்ட அதிபகட்சமான தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

வாக்குப் பதிவுக்கு சில நாள்களே இருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் விநியோகிக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 ஆயிரமாக இருந்த குழுக்கள் இப்போது 7 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது.

பூத்-சிலிப்கள் விநியோகம்: வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத்-சிலிப் விநியோகம் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதுவரை 83 சதவீதம் அளவுக்கு பூத்-சிலிப்கள் நேரடியாக வாக்காளர்களைச் சந்தித்து அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பூத்-சிலிப்கள் சீலிடப்பட்டு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

58 சதவீத வாக்குச் சாவடிகள்: தமிழகத்தில் மொத்தம் 66 ஆயிரத்து 1 வாக்குச் சாவடிகள் உள்ளன. அதில், 26 ஆயிரம் சாவடிகளில் வெப்-காமிரா மூலமும், 8 ஆயிரத்து 500 வாக்குச் சாவடிகள் நுண்பார்வையாளர்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளன. மேலும், 10 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் முழு நடவடிக்கைகளும் விடியோ பதிவு செய்யப்படும்.

58 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் மட்டும் வெப்-காமிரா அல்லது நுண்பார்வையாளர் மூலமாக கண்காணிக்கப்பட உள்ளன.

அதிகரிக்கும் புகார்கள்: தேர்தல் நடத்தை விதிகளை மீறியது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது போன்றவை தொடர்பாக பல்வேறு புகார்களை வாக்காளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கென, தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் நாளொன்றுக்கு 13 ஆயிரம் புகார்கள் வருகின்றன.

கட்செவி அஞ்சல் வழியாக இதுவரை ஆயிரத்து 379 புகார்கள் வரப்பெற்று அவை தீர்க்கப்பட்டுள்ளன.

ரூ.100 கோடி பணம் பறிமுதல்: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அன்றைய தேதி முதல், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இதுவரை ரூ.100.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், சுமார் 38 கோடி வரையிலான பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டியில் பணத்தை ஒழித்து வைப்பது, காவலர்களிடம் பணத்தை கொடுத்து வைத்து விநியோகிப்பது போன்ற நூதன வழிகளை அரசியல் கட்சியினர் பின்பற்றுகின்றனர். ஆனாலும், அவை பறக்கும் படையினரால் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

13 பார்வையாளர்கள்: தமிழகத்தில், கூடுதலாக 13 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வருமான வரித் துறையினரின் தேடுதல் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பர். தமிழகத்தில் 234 வாக்குச் சாவடிகளில் அனைத்து ஊழியர்களும், அரசியல் கட்சியின் முகவர்களும் பெண்களாக இருப்பார்கள். மேலும், 968 வாக்குச் சாவடிகள் வாக்காளர்களை வரவேற்கும் வரவேற்பாளர் உள்பட பல்வேறு வசதிகள் அடங்கிய மாதிரி சாவடிகளாக அமைக்கப்பட்டு இருக்கும்” என்று தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News