நடுங்கும் கோட்டை நான் பழைய பன்னீர் இல்லை?

நடுங்கும் கோட்டை நான் பழைய பன்னீர் இல்லை?

அம்மாவின் விசுவாசி, அ.தி.மு.க வின் உண்மையான தொண்டன் என நிரூபித்த முதல்வர் பன்னீர் செல்வம். தான் யார் என்பதை ஒவ்வொரு நாளும் ஆணித்தரமாக நிருபிக்க ஆரம்பித்து விட்டார். டெல்லிக்கு போய் வந்ததும் முதல் அதிரடியாக காலத்தில் குதித்தார். அவர் முதலில் கைவைத்து தலைமைச்செயலலாளர் ராம் மோகன் ராவ். அவர் வசிக்கும் அண்ணாநகர் வீடு, தலைமை செயலகத்தில் அமைந்துள்ள அலுவலகம், என நேற்று காலை தொடங்கிய இந்த சோதனை நேற்று பகல் முழுவதுமாக நடந்தது, நேற்று இரவும் தொடர்ந்து விடிய விடிய (கிட்டத்தட்ட 25 மணி நேரம்) நடந்தது.

இந்த ரெய்டுக்கு பின் அடுத்தடுத்த அட்டாக் தொடரும் என்கிறார்கள் கோட்டை வட்டாரங்கள். இந்நிலையில் நேற்று கடும் கோபத்தில் கோட்டைக்கு சிங்கமென வந்தார் முதல்வர் பன்னீர் செல்வம். மொத்த அமைச்சர்களையும் தனது அறைக்கு வர கட்டளையிட்டார். யாரையும் உட்காரவும் சொல்லவில்லை. நின்றபடியே இருந்தார்கள், ஏறிட்டு பார்த்த முதல்வர், அம்மா விட்டுசென்ற கடமைகள் நிறைய இருக்கிறது. அம்மாவின் கனவுகளும் நிறைய இருக்கிறது. நமக்கு அம்மா மட்டும் தான். சின்னஅம்மா, பெரிய அம்மா, நடுஅம்மா என்று யாரும் இல்லை.

யாருக்கும் காவடி தூக்க வேண்டாம். யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது. தப்பு பண்றவங்களுக்கு துணை போனீர்கள் என்றால் உங்களை கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது.

போய் வேலைகளை கவனியுங்கள் என்று கடும் கோபமாக அனுப்பினாராம். ஆடிப் போய்விட்டார்கள் அமைச்சர்கள். முகம் இருண்டு போய் திரும்பினார்கள் என்கிறார்கள். இது நம்ப பழைய பன்னீரா? என குழப்பத்தில் உள்ளார்களாம் அமைச்சர்கள். பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை அறிந்த மன்னார்குடி வட்டாரம் நடுங்கிப்போய் கிடக்கிறதாம்.

Related Post