தங்கமகன் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி வழங்கி முதல்வர் பன்னீர் செல்வம் வாழ்த்து! Tamilnadu Chief Minister Panner Selvam Awarded 2 crrore cash price to Gold Medalist Mariappan

ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற த.மாரியப்பனுக்கு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கி வாழ்த்தினார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரேசில் நாட்டின், ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியின் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த த.மாரியப்பன்.

அவருக்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று 10.9.2016 அன்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியின் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற த.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத் தொகையான 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று வழங்கி வாழ்த்தினார்.

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார், த.மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா ஆகியோர் உடனிருந்தனர்.