நல்ல திட்டங்களை பயன்படுத்த பா.ஜ.க, போட்டி: தமிழிசை சௌந்தரராஜன்

விவசாயிகளின் நலன் கருதி பா.ஜ., 3 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் காலியாக உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கி, நேற்று முதல் நடந்து வருகிறது. நவம்பர் 2ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. இதுவரை அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து, பிரசாரத்தை துவக்கி உள்ளன. இந்நிலையில் பா.ஜ., வேட்பாளர் பட்டியmf விரைவில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், 3 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும். விவசாயிகளின் நலன் கருதியே 3 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது என தெரிவித்தார்.